கொரோனா தொற்றுக்குள்ளான 22 வயது இளைஞன் ஒருவர் தப்பியோடியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சப்புகஸ்கந்த பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மாகொல பகுதியில் தனது வீட்டிலிருந்த நிலையிலேயே அவர் தப்பிச் சென்றுள்ளார்.
இவ்வாறு தப்பியோடிய இளைஞன் போதைப்பொருள் பாவனைக்கு அடிமையானவர் எனவும் இவர் தொடர்பில் தகவல் அறிந்தால் அறியத்தருமாறும் பொலிஸார் கேட்டுக் கொண்டுள்ளனர்.
மாகொல பகுதியில் தேவாலய வீதியில் வசிக்கும் நிமேஷ் மதுஷங்க என்ற நபர் அண்மையில் மஹர சிறைச்சாலையிலிருந்து விடுவிக்கப்பட்டதாகவும், அவரை வீட்டுத் தனிமைப்படுத்தலில் இருக்குமாறும் அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.
அதனையடுத்து அவரை ஒரு சிகிச்சை மையத்திற்கு அழைத்துச் செல்ல அதிகாரிகள் அவரது வீட்டிற்கு சென்றிருந்தபோது அவர் நேற்று மாலை முதல் காணாமல் போயிருந்தார்.
இந் நிலையல் இது தொடர்பில் ஏதேனும் தகவல் அறிந்தால் 0718591599 என்ற தொலைபேசி இலக்கங்களூடாக சப்புகஸ்கந்த பொலிஸ் நிலையப் பொறுப்பாதிகாரிக்கு தகவல் வழங்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.