உக்ரேனுக்கு பிரித்தானியா 2022 மார்ச் மாதம் இனாமாக வழங்கிய உக்ரேனியப் படையினர் இரசியாவின் MI-24 உலங்கு வானூர்தியை சுட்டு விழுத்தியதில் இருந்து Starstreak ஏவுகணை படைத்துறை நிபுணர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

உக்ரேனியர்களுக்கு அவர்களின் அயல் நாடு ஒன்றில் வைத்து பிரித்தானியப் படைத்துறை நிபுணர்கள் Starstreak ஏவுகணைகளை இயக்குவதற்கு பயிற்ச்சி வழங்கியிருந்தனர்.

Starstreak ஏவுகணைகளைப் பெட்டியில் எடுத்துச் சென்று ஒரு சில நொடிகளில் பொருத்த முடியும்.

உக்ரேனியர்களால் சுடப்பட்ட இரசியாவின் உலங்கு வானூர்தி Starstreak ஏவுகணையால் இரண்டு துண்டங்களாக தரையில் விழுந்தது. இது முதன் முதலாக உக்ரேனியர்கள் ஏவிய Starstreak ஏவுகணையால் வீழ்த்தப்பட்டுள்ளது.

MANPAD – MAN PORTABLE AIR DEFENCE SYSTEM

குறுகிய தூர ஏவுகணை, இலகுவாக எடுத்துச் செல்லக்கூடிய MANPAD ஏவுகணைகள் வகையைச் சார்ந்தது.

இதைத் தோளிலும் வானூர்திகளை இலக்கு வைத்து செலுத்தலாம். ஒரு முக்காலியிலும் வைத்து செலுத்தலாம்.

தாங்கிகள் கவச வண்டிகள் சிற்றூர்திகள் போன்றவற்றில் வைத்தும் இவற்றை செலுத்தலாம் என்பது மட்டுமல்ல உலங்கு வானூர்தி மற்றும் கடற்கலன்களிலும் இருந்து இவற்றை ஏவு எதிரியின் உலங்கு வானூர்தி மற்றும் தாழப்பறக்கும் விமானங்களைச் சுட்டு வீழ்த்தலாம்.

இரசியர்களிடம் வழிகாட்டல் ஏவுகணைகள் போன்ற Smart bombsஇற்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள படியால் அவர்களின் உலங்கு வானூர்திகளும் விமான ங்களும் தாழப்பறந்தே குண்டுகளை வீசுகின்றன.

நகர்சார் போரில் சிறப்பாக செயற்படும்

பிரித்தானியாவின் Starstreak ஏவுகணைகள் நகர்சார் போரில் சிறப்பாகச் செயற்படக் கூடியவை.

அவற்றை மாடிக்கட்டிடங்கள், மொட்டை மாடிகள் போன்றவற்றில் மறைந்திருந்து செலுத்தி எதிரியின் வானுர்திகளை அழிக்கலாம். Starstreak ஏவுகணைகள் லேசர் கதிகளால் வழிகாட்டப்படுபவை என்பதால் அவை இலக்குகளைத் துல்லியமாகத் தாக்கக் கூடியவை.

இந்த ஏவுகணை வீசமுன்னர் வீசப்படும் லேசர் ஒளிக்கதிர்கள் வலிமைகுறைந்தவையாக இருப்பதால் அவற்றை எதியின் வானூர்திகளால் உணர முடியாமல் இருக்கும்.

இவற்றால் தாக்கப்படும் போது உடன் சேதம் (Collateral Damage) குறைந்த அளவிலேயே இருக்கும். சிறிய ஆளிலிவிமானங்களையும் இவற்றால் அழிக்கலாம்.

MACH-3 ஒலியிலும் பார்க்க மூன்று மடங்கு வேகம்

ஒலியிலும் பார்க்க மூன்று மடங்கு வேகத்தில் பாயக் கூடியது. அதாவது மணித்தியாலத்திற்கு 3700கி.மீ வேகம். தற்போது உலகெங்கும் உள்ள குறுந்தூர ஏவுகணைகளுக்குள் இது மிக வேகமான ஏவுகணை. எழுகிலோ மீட்டர் தூரம் வரை பாய்ந்து இலக்குகளை அழிக்கவல்லது.

இரசிய விமானிகள் தங்களது விமானத்தின் பறப்பு பாதையை சடுதியாக திசை திருப்புவதில் வல்லவர்கள்.

அவர்களின் விமான இயந்திரங்களும் அதற்கு ஏற்ப வடிவைக்கப்பட்டுள்ளவை. அதை vector thrust engine என்பார்கள்.

ஒலியிலும் பார்க்க மூன்று மடங்கு வேகத்தில் பறக்கும் Starstreak ஏவுகணைகள் அவர்கள் விமானத்தை திசை திருப்ப முன் அதை அழித்துவிடும். அமெரிக்காவின் Stinger Missiles ஒலியிலும் பார்க்க 2.54 மடங்கு வேகம். மணித்தியாலத்திற்கு 3136கிமீ வேகம்

Starstreak இரண்டு நிலைகளைக் கொண்ட ஏவூர்தி ஓடிகளைக் கொண்டது (Two stage solid propellant rocket motor) ஒன்று பிரிக்கும் முறைமை மற்றது மூன்று உயர் அடர்த்தியான குண்டுகளைக் கொண்டது. அவை மூன்று துளைகளை இட்ட பின்னர் குண்டு வெடிக்கும்.

பழைய விமானங்களைக் கொண்டது உக்ரேன் விமானப்படை. இரசிய வானூர்திகள் உக்ரேனில் வானாதிக்கம் செலுத்தாமல் இருக்க வலிமை மிக்க வான் பாதுகாப்பு உக்ரெனுக்கு அவசியம்.

ஆனால் நேட்டோ நாடுகள் தொலை தூர விமான எதிர்ப்பு ஏவுகணைகளை உக்ரேனுக்கு வழங்காமல் இருக்கின்றன.

அதிகமான Stinger Missilesஉம் Starstreak missilesஉம் உக்ரேனியர்களுக்கு கிடைக்கும் போது இரசிய உழங்கு வானூர்திகள் அங்கு செயற்பட முடியாமல் போகலாம். இரசியாவின் முன்னணி விமானங்கள் உயரத்தில் இருந்தே செயற்பட வேண்டியிருக்கும்.

-வேல்தர்மா-

Share.
Leave A Reply

Exit mobile version