அன்று 1939 ஆம் வருடம் ஆகஸ்ட் மாதம் 31 ஆம் திகதி நாள். போலந்து எல்லையில் உள்ள ” Sender Gleiwitz ” என்ற ஜெர்மன் வானொலி நிலையத்திற்குள் போலந்து ராணுவ படையினர் அத்துமீறி நுழைந்தனர்.
போலந்து இராணுவ படையினர் குறித்த வானொலியின் ஒலிபரப்பு கட்டுப்பாட்டை தங்கள் வசம் கைப்பற்றினர்.
வானொலி நிகழ்ச்சிகள் மூலம் நேரடியாக போலந்து மொழி மூலம் ஜெர்மன் மீது இழிவான கருத்துக்களை வெளியிட்டு சேறு பூசினர்.
போலந்து இராணுவ படையினர் அந்த வானொலி நிலையத்தில் பணி புரிந்து வந்த பல ஜெர்மன் நாட்டுப் பிரஜைகளை கொலை செய்தனர்.
அவ்வாறு கொடூரமாக கொலை செய்யப்பட்ட ஜெர்மன் நாட்டுப் பிரஜைகளின் உறவினர்கள் அவர்களது சடலங்களை கட்டி அணைத்து கதறிக் கதறி அழுத துயரமான வீடியோ காட்சிகளை ஜெர்மன் மக்களுக்கு காண்பிக்க நாசி படையின் அதிகாரிகள் நடவடிக்கை எடுத்திருந்தனர்.
இந்தத் தாக்குதலானது ஜெர்மனியின் தேசிய பாதுகாப்புக்கு பாரிய அச்சுறுத்தல் எனவும் ஜெர்மன் நாட்டுக்கு எதிராக போலந்து நடத்திய தாக்குதல் எனவும் அவர்கள் குரல் எழுப்பினர்.
அடால்ஃப் ஹிட்லர் இந்தச் சம்பவத்தைப் அடிப்படையாகப் பயன்படுத்தி, அப்போது ஐரோப்பிய ஒன்றியத்தில் சுதந்திர நாடாகத் திகழ்ந்த போலந்தை ஆக்கிரமிப்பு செய்தார்.
ஹிட்லரின் அந்தப் படை நடவடிக்கை பிற் காலத்தில் இரண்டாம் உலக மகா யுத்தம் ஏற்படுவதற்கு கதவைத் திறந்தது.
Gleiwitz சம்பவம் ஹிட்லரின் SS படை பிரிவால் அரங்கேற்றப்பட்ட நாடகம் என்பது பிற் காலத்தில் தெரிய வந்தது.
ஹிம்லர் என்பவரின் தலைமையில் போலந்து நாட்டு இராணுவ படை சீருடை அணிந்த SS வீரர்கள் குழுவே உள்ளே நுழைந்து இவ்வாறு தாக்குதல் நடத்தி கொலைகளை செய்தது. போலந்து நாட்டை ஆக்கிரமிப்பு செய்வதற்கு ஜெர்மனிக்கு உள்ளேயும் வெளியேயும் தேவையான கருத்தை உருவாக்குவதே இந்த தாக்குதலின் ஒரே பிரதான நோக்கமாக இருந்தது.
உக்ரைன் மீது படை எடுப்பு செய்து ஆக்கிரமிப்பதன் நோக்கமாகவே ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் இதே போன்ற தந்திரத்தை பயன்படுத்தி உள்ளார்.
கிழக்கு உக்ரைன் பகுதியில் உள்ள டான்பாஸ் பகுதியில் அமைந்துள்ள ரஷ்ய சார்பு லுஹான்ஸ்க் மற்றும் டொனெட்ஸ்க் ” மக்கள் குடியரசுகள் ” இந்த தந்திர நடவடிக்கைக்கு பயன்படுத்தப்பட்டுள்ளன.
ரஷ்ய வம்சாவளி மக்களை பெரும்பான்மையாகக் கொண்ட இந்த பகுதிகள் கடந்த 2014 ஆம் ஆண்டில் உக்ரைனில் இருந்து பிரிந்து தனியான ” மக்கள் குடியரசுகள் ” என்று அழைக்கப்பட்டன.
இந்த பயங்கரவாத குழுக்களே உக்ரைன் அரச படைகளுடன் போர் புரிந்து வருகின்றன. அவர்களுக்குத் தேவையான ஆயுதங்கள் உள்ளிட்ட அனைத்து வளங்களையும் ரஷ்யா வழங்கி வருகிறது.
உக்ரேனிய துருப்புக்கள் இந்த ” குடியரசுகளில் ” வாழும் ரஷ்ய – சார்பு மக்கள் மீது ஷெல் தாக்குதல் நடத்தி வருவதாக ஒரு பாரிய கருத்தை பரப்பி ஊடக மாயையை ரஷ்யா உருவாக்கி வருகிறது.
இவ்வாறு பரப்பி விடப்பட்டுள்ள கட்டுக் கதை ரஷ்யாவில் உள்ள மின்னணு, அச்சு மற்றும் சமூக ஊடகங்கள் மூலம் மிக வேகமாக பரப்பப்பட்டு வருகிறது.
ரஷ்யாவில் சுதந்திரமான ஊடகங்களோ அல்லது உத்தியோகபூர்வ எதிர் கட்சியோ இல்லாத காரணத்தால், அத்தகைய கருத்துக்களை ஊடக மாயை மூலம் முன்னெடுப்பதில் சிரமம் ஏற்படாது.
அதனை செயற்படுத்துவது மிகவும் எளிதான ஒன்றாகும். ரஷ்ய சார்பு லுஹான்ஸ்க் மற்றும் டொனெட்ஸ்க் ” மக்கள் குடியரசுகள் ” தனியான சுதந்திர நாடுகளாக அங்கீகரிக்கப்பட்ட நிகழ்வில் உரையாற்றிய ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் மீண்டும் மீண்டும் உக்ரேனிய படைகள் இந்த ” குடியரசுகளின் ” மக்கள் மீது ஷெல் தாக்குதல் நடத்தி வருவதாக குற்றம் சாட்டினார்.
‘ இன அழிப்பு ‘ மற்றும் ‘ ஷெல் தாக்குதல் ‘ ஏமாற்றுக் கதை ..
லுஹான்ஸ்க் மற்றும் டொனெட்ஸ்க் பகுதி மக்களுக்கு எதிராக உக்ரேனிய அரசாங்கம் ” இனப் படுகொலை ” செய்ததாக விளாடிமிர் புட்டின் குற்றம் சாட்டினார்.
மேலும் இனப் படுகொலையைத் தடுக்கவே ” குடியரசுகளை ” அதிகாரப்பூர்வமாக அங்கீகரித்ததாக புட்டின் கூறினார்.
ஆனால் இந்த குற்றச்சாட்டுகளை விளாடிமிர் புட்டினின் ஆதரவாளர்கள் தவிர வேறு யாரும் ஏற்கவில்லை.
ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டெரஸ், “ அத்தகைய இன அழிப்பு சம்பவங்கள் எதுவும் நடக்கவில்லை ” என்று பகிரங்கமாகவே கூறி இருக்கிறார். விளாடிமிர் புட்டினின் குற்றச்சாட்டையும் அவர் நிராகரித்துள்ளார்.
உலக வரை படத்தில் இருந்து செக்கொஸ்லோவியாவை ஹிட்லர் அகற்றிய விதம் …
மே மாதம் 28 ஆம் திகதி 1938 ஆம் ஆண்டு அப்போது ஐரோப்பாவில் சுயாதீன தனி நாடாக விளங்கிய செக்கோஸ்லோவாக்கியா மீது படை எடுக்கத் தயாராகிய போது, ஹிட்லர் தனது இராணுவத் தலைவர்களை நோக்கி, ” I am utterly determined that, Czechoslovakia should disappear from the map “. அதாவது ” செக்கோஸ்லோவாக்கியா வரைபடத்தில் இருந்து மறைத்து விட வேண்டும் என்பதில் நான் உறுதியாக இருக்கிறேன் ” என்று அறிவித்தனர்.
செக்கோஸ்லோவாக்கியாவை உலக வரை படத்தில் இருந்து அகற்றி ஜெர்மனியுடன் இணைக்க ஹிட்லர் உறுதியாக இருந்தார்.
இறுதியில் அவர் அந்த இலக்கை அடைந்தார். அது போலவே உக்ரைன் மீது படை எடுப்பதற்கு முன் நாட்டு மக்களுக்கு உரையாற்றிய ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின், உக்ரைனை உலக வரை படத்தில் இருந்து நீக்கி ரஷ்யாவுடன் இணைத்துக் கொள்ள உள்ளதாகக் கூறினார்.
விளாடிமிர் புட்டின் சுதந்திர நாடான உக்ரைனை வரலாற்று உரிமை இல்லாத காலனியாக வரையறுத்தார். உக்ரைன் ரஷ்யாவின் ஒரு பகுதி என்று ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் பல முறை கூறி வருகிறார்.
ஹிட்லரால் கைப்பற்றப்பட்ட சுதேடென் ஜெர்மானியர்கள் …
ஹிட்லர் செக்கோஸ்லோவாக்கியாவை ஆக்கிரமிக்க பயன்படுத்தியது அதன் எல்லைக்கு அருகில் வாழ்ந்த ஜெர்மன் வம்சாவளியைச் சேர்ந்த ஒரு சிறிய இனக் குழுவை ஆகும்.
செக்கோஸ்லோவாக்கியா நாட்டின் மொத்த மக்கள் தொகையில் நான்கில் ஒரு பங்கினராக சுடேடென் ஜெர்மானியர்கள் வாழ்ந்து வந்தனர்.
சுடேடன் ஜெர்மனிய மக்களின் தலைவராக இருந்த கான்ராட் ஹெயின்லைன் என்பவரை ஹிட்லர் தனது கைப் பாவையாகப் பயன்படுத்தினார். Heinlein என்பவர் மூலம், சுடேடன் மூலம் ஜெர்மனிய மக்களுக்கு சுய ஆட்சி கோரிக்கை முன் வைக்குமாறு ஹிட்லர் பணித்தார்.
சுடேடென் ஜெர்மானியர்களான தங்களுடைய சொந்த மக்களை செக்கோஸ்லோவாக்கியா துன்புறுத்தி வருவதாகவும் அதனால் தங்களை ஜெர்மனியுடன் இணைக்குமாறும் கோரிக்கை விடுமாறு ஹிட்லர் ஹெய்ன்லீடம் கோரிக்கை முன் வைக்குமாறு கோரினார்.
சுடேடென் ஜெர்மனியர்களை செக்ஸால் துன்புறுத்தி வருவதாக ஹிட்லர் பல முறை பகிரங்க மேடைகளில் குற்றம் சுமத்தி வந்தார்.
சுடேடென் ஜெர்மனி மக்களின் கோரிக்கையை நிறைவேற்ற என்று கடைசியில் செக்கோஸ்லோவாக்கியா மீது படை எடுத்த ஹிட்லர் அதனை ஆக்கிரமித்தார்.
உலக வரை படத்தில் இருந்து நீக்கினார் ..! ஹிட்லரின் அதே பழைய யுக்தியை பயன்படுத்தி விளாடிமிர் புட்டின் உக்ரைனை ஆக்கிரமிக்கத் தொடங்கி உள்ளார்.
ஹிட்லர் மற்றும் புட்டடின் பானையை போட்டுப் பார்த்த விதம் …
செக்கோஸ்லோவாக்கியா மீது படை எடுப்பதற்கு முன், ஹிட்லர் பானை போட்டுப் பார்த்தார். ஆனால் அவர் எதிர்பார்த்த அளவுக்கு மற்ற ஐரோப்பிய நாடுகளில் இருந்து எதிர்ப்பு வர வில்லை.
சந்தர்ப்பத்தை பயன்படுத்திய ஹிட்லர் ரைன்லாந்து மற்றும் ஆஸ்திரியாவைக் ஆக்கிரமிப்பு செய்தார்.
பின்னர் அவர் செக்கோஸ்லோவாக்கியா மற்றும் போலந்து நாடுகளை ஆக்கிரமித்து கைப்பற்றினார்.
இது போலவே ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் ஜார்ஜியா மீது பானை போட்டுப் பார்த்தார். சர்வதேச சமூகத்தின் வலுவான எதிர்ப்பு இல்லை என்பதை உணர்ந்த விளாடிமிர் புட்டின் 2008 ஆம் ஆண்டு தனி சுதந்திர நாடான ஜார்ஜியாவை ஆக்கிரமித்து கைப்பற்றினார்.
பின்னர் ரஷ்யப் படைகளை செச்சினியாவுக்கு அனுப்பினார். ஆனால் அவரது உண்மையான இலக்கு உக்ரைன் நாடாக இருந்தது.
முதலாம் உலக மகா போரில் ஜெர்மனி இழந்த பகுதிகளை மீட்டு எடுத்து மீண்டும் ஜெர்மன் பேரரசை நிறுவ ஹிட்லர் விரும்பினார்.
அது போலவே விளாடிமிர் புட்டின் ரஷ்ய ஒன்றியத்தில் இருந்து பிரிந்து சென்ற நாடுகளை மீட்டு சோவியத் யூனியனை மீண்டும் கட்டி எழுப்ப முயற்சி செய்கிறார்.
1991 ஆம் ஆண்டு புட்டின் கூறியது போல், சோவியத் ஒன்றியத்தின் சரிவு இருபதாம் நூற்றாண்டின் மிகப் பெரிய அவலம் என்றார்.
சோவியத் யூனியனை மீண்டும் உருவாக்குவதே அவரது ஒரே நோக்கமாக இருந்தது. ஹிட்லரைப் போலவே, புட்டினும் நாட்டில் ஒரு தேசிய வாத போர் குணமிக்க சித்தாந்தத்தை உருவாக்குவதற்கான யோசனையைப் பயன்படுத்துகிறார்.
அதற்காக மாற்று கருத்து உள்ளவர்களை அவர் அடக்கி ஒடுக்குகிறார். எதிர்க் கட்சி தலைவர்கள் கைது செய்யப்பட்டனர். சிலர் பட்டப் பகலில் கொலை செய்யப்பட்டனர்.
சுதந்திர ஊடகங்களை நசுக்கினார். இடது சாரிகள், தாராளவாதிகள், சிறு பான்மையினர், யூதர்கள், ஓரினச் சேர்க்கையாளர்கள், ஒடுக்கப்பட்டவர்கள் என அனைவரையும் அடக்கினார் புட்டின். அவர்களுக்கு எதிராக செயற்பட்டார் விளாடிமிர் புட்டின்.
அன்று ஹிட்லரைப் புகழ்ந்த வலது சாரிகள் இன்று புட்டினைப் பிடித்து புகழ்ந்து தள்ளுகின்றனர் …
யூதர்கள், இடது சாரிகள் மற்றும் தாராளவாதிகள் துன்புறுத்தப்படுவதில் சிலர் மிகவும் ஆர்வமாக இருந்தனர்.
பின்னர் அமெரிக்கா முதலில் அமெரிக்காவின் America first பிரபலமான தேசியவாதக் கொள்கையைப் பின்பற்றியது, அது இன்று ட்ரம்பிசத்தை (Trumpism) அடிப்படையாகக் கொண்டது.
ஐரோப்பாவில் வரவிருக்கும் போரினால் தமக்கு பாதிப்பு இல்லை என்று கூறி ஹிட்லருக்கு ஆயுதங்களை விற்றனர்.
சில அமெரிக்க வலது சாரிகள் ஹிட்லரை கம்யூனிசத்தில் இருந்து உலகைக் காப்பாற்ற வந்த ஒரு போர் வீரனாக வளர்ந்தனர்.
பொருளாதார தடைகள் மேலும் தலையீட்டுக்கு வழிவகுக்க முடியாது. அந்த நேரத்தில், ஜார்ஜியா மற்றும் உக்ரைன் நாடுகளுக்கு ஐரோப்பிய ஒன்றிய உறுப்புரிமை வழங்கப்பட வேண்டும் என்று முன் மொழியப்பட்ட போது, பிரான்ஸ் மற்றும் ஜெர்மனி ஆகிய நாடுகள் கடுமையாக எதிர்த்தன. மீதி வரலாறு.
பொருளாதார தடை என்ற ஏமாற்று வித்தை …
விளாடிமிர் புட்டின் இம்முறை உக்ரைனை ஆக்கிரமித்த போது, ரஷ்யா மீது பொருளாதாரத் தடைகள் விதிப்பதைத் தவிர மேற்கத்திய முகாமுக்கு வேறு ஒன்றும் செய்ய முடியாது என்பது புட்டினுக்குத் தெரியும் என்று அவரது செய்தித் தொடர்பாளர் கூறினார்.
செய்தி தெளிவாக உள்ளது. உக்ரைன் மீதான ரஷ்யாவின் ஆக்கிரமிப்பு ஏற்கனவே பல தார்மீக நாடுகளால் கடுமையாக கண்டிக்கப்பட்டுள்ளது. உக்ரைனில் இருந்து ரஷ்ய துருப்புக்கள் வெளியேறுமாறு வற்புறுத்துகின்றனர்.
இந்தப் படை எடுப்பு ஆக்கிரமிப்பு நடவடிக்கைக்கு சீனா, சிரியா, பெலாரஸ் போன்ற சர்வாதிகார தலைமை கொண்ட நாடுகள் புட்டினின் திட்டத்திற்கு ரஷ்யாவை ஆதரிக்கின்றன. தைவான் மீது படை எடுத்து ஆக்கிரமிப்பு சதி செய்ய காத்திருக்கும் சீனாவுக்கு புட்டினின் உக்ரைன் படை எடுப்பு ஒரு வரப்பிரசாதம்.
விளாடிமிர் புட்டினின் ” வௌ்ளை – கிறிஸ்தவ ” ரஷ்யா …
உலகம் முழுவதும் பரந்து வாழும் வலது சாரி, தேசிய வாதி, வெள்ளை இன வெறி, சிறுபான்மை எதிர்ப்பு, குடியேற்ற எதிர்ப்பு, ஓரினச் சேர்க்கையாளர்களுக்கு எதிரான அரசியல் கட்சிகள், தலைவர்கள் மற்றும் அமைப்புகள் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினின் உக்ரைன் ஆக்கிரமிப்பு படை எடுப்பை ஆதரிக்கின்றன. ஆதரவு வழங்குகின்றன.
புட்டின் ரஷ்யாவை முற்றிலும் ” வெள்ளை – கிறிஸ்தவ ” நாடாக மாற்ற முயற்சி செய்கிறார். புட்டின் சுதந்திர ஊடகங்கள், அதிருப்தியாளர்கள், எதிர்க் கட்சி ஆர்வலர்கள், இடது சாரிகள், தாராளவாதிகள், சிறுபான்மையினர் ( குறிப்பாக முஸ்லிம்கள் ) , யூதர்கள் மற்றும் ஓரினச் சேர்க்கையாளர்களை ஒடுக்குகிறார்.
சுதந்திரமான தேர்தல் முறையை அழித்துள்ளார். இன்று பைத்தியக்கார சர்வாதிகாரி போல் நடந்து கொள்கிறார்.
அத்தகைய சர்வாதிகாரியை உலகம் முழுவதிலும் உள்ள வலது சாரி, தேசிய வாதி, வெள்ளை இன வெறி, சிறுபான்மை எதிர்ப்பு, புலம் பெயர்ந்தோர் மற்றும் ஓரினச் சேர்க்கைக்கு எதிரான குழுக்களால் உயர்வாகக் கருதுவதில் புதுமை அடைய வேண்டியது இல்லை. இவர்கள் அனைவரும் ஒரே கூடை தேங்காய்கள்.
உக்ரைன் மீதான புதினின் படை எடுப்பை அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் பாராட்டி உள்ளதுடன், இது ஒரு ” மேதை ” செயல் என்றும் புகழ்ந்து கூறி உள்ளார்.
குடியரசுக் கட்சியின் ட்ரம்ப் பிரிவின் அரசியல்வாதிகள் மற்றும் ஆதரவாளர்கள் இன்று புட்டினையும் உக்ரைன் மீதான படை எடுப்பையும் பகிரங்கமாகப் பாராட்டுகிறார்கள்.
அமெரிக்க வலது சாரி ஊடக நிறுவனங்களான Fox News , Tucker Carlson ஃபாக்ஸ் நியூஸின் டக்கர் கார்ல்சன் உட்பட்ட பத்திரிக்கையாளர்கள், புட்டினையும் உக்ரைன் படை எடுப்பையும் பகிரங்கமாக வாழ்த்துகிறார்கள்.
ஹிட்லர் ஐரோப்பாவை ஆக்கிரமித்த போது அவருக்கு ஆதரவாக இருந்த அமெரிக்க வலது சாரிகளை இந்த நிலைமை நினைவு படுத்துகிறது.
பின்லாந்து மற்றும் ஸ்வீடனை மிரட்டும் விளாடிமிர் புட்டின்…
வரலாறு மீண்டும் மீண்டும் உருவாக்கப்படுகிறது. இன்று புட்டின் உக்ரைனை ஆக்கிரமித்ததைப் போலவே ஹிட்லர் ஐரோப்பா மீதான தனது படை எடுப்பைத் தொடங்கினார்.
இப்போது புட்டின் பின்லாந்து மற்றும் ஸ்வீடனை அச்சுறுத்தி வருகிறார். ‘ நேட்டோ’ அமைப்பில் இவ்விரு நாடுகளும் இணைவதை அவர் கடுமையாக எதிர்க்கின்றார்.
பின்லாந்தும் ஸ்வீடனும் நேட்டோ அமைப்பில் இணைந்தால் ” கடுமையான இராணுவ மற்றும் அரசியல் விளைவுகளை ” சந்திக்க நேரிடும் என்று ரஷ்யா கடந்த வெள்ளிக் கிழமை பகிரங்கமாக அச்சுறுத்தியது.
ஐரோப்பிய யூனியனில் இணைந்ததற்கான காரணத்தைக் கூறி, உக்ரைன் மீது புட்டின் படை எடுத்தார்.
இப்போது உக்ரைன் ஆயுதங்களைக் கீழே போட்டால் பேச்சுவார்த்தைக்குத் தயார் என்கிறார். சுதந்திர நாட்டின் மீது படை எடுத்து அந்த சுதந்திர நாட்டிடம் ஆயுதங்களைக் கீழே போட சொல்ல முடியுமா ? இன்று உலகின் சுதந்திர நாடுகள் புட்டினின் விருப்பத்திற்கு ஏற்ப வெளி உறவுக் கொள்கையை முடிவு செய்ய வேண்டும்.
ரஷ்யாவின் அண்டை நாடுகள் தங்கள் சொந்த விருப்பத்திற்கு ஏற்ப நடனமாடும் பொம்மைகளை நியமிக்க வேண்டும் என்று புட்டின் விரும்புகிறார். பெலாரஸ் இதற்கு சிறந்த உதாரணம்.
எதிர் காலத்தில் உக்ரைனுக்கு அலெக்சாண்டர் லுச்சென்கோவை போன்ற தலையாட்டி பொம்மையை புட்டின் நியமிப்பார். அன்று தொடக்கத்தில் ஹிட்லரை தடுக்க முடியாத ஐரோப்பா மற்றும் அமெரிக்காவிற்கு இன்று புட்டினை தடுத்து நிறுத்த முடியுமா ?
” கடந்த காலத்தை மறந்தவன் மீண்டும் அதே கடந்த காலத்தை அனுபவிப்பான் ” என்பதை மட்டும் இந்த இடத்தில் குறிப்பிடுகிறோம். மீதி வரலாறு ..!!
-எழுதியவர் அனுபாவனந்த