நடிகர் சூர்யா தற்போது இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் ஜல்லிக்கட்டை மையமாக வைத்து உருவாகும் ´வாடிவாசல்´ படத்தில் நடித்து வருகிறார்.

சமீபத்தில், இப்படத்தின் முன்னோட்ட காட்சிகளை படக்குழுவினர் எடுத்தனர். அப்படம் சம்மந்தப்பட்ட புகைப்படங்கள் வெளியாகி ரசிகர்கள் கொண்டாடி வந்தனர். அப்படத்திற்காக அவர் காளை ஒன்றை வளர்த்து வருகிறார்.

இந்நிலையில், சூர்யா தான் வளர்க்கும் காளையுடன் ´என் தமிழ்..´ இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் என்று கூறி அனைவருக்கும் தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துக்களைக் கூறி ஒரு விடியோவைப் பகிர்ந்துள்ளார்.

தற்போது அந்த விடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

Share.
Leave A Reply

Exit mobile version