நிறைவேற்று அதிகாரமுடைய  ஜனாதிபதி முறைமையின்  அதிகாரங்களை  குறைத்து 19 ஆவது திருத்த சட்டத்தை மீண்டும் கொண்டுவரும்   விடயத்தில் ஆளும், எதிர்க்கட்சிகள் தற்போது    ஒரு குறிப்பிட்ட  அளவிலான  இணக்கப்பாட்டுக்கு  வந்துள்ளன.

பிரதமர் மஹிந்த ராஜபக் ஷவும்  இது தொடர்பில் சாதகமான சமிக்ஞையை  வெளிப்படுத்தியிருக்கின்றார்.

பிரதமர்    பாராளுமன்றத்திலேயே  இது தொடர்பாக அறிவித்திருக்கின்றார்.  அதேபோன்று  தற்போது  எதிர்க்கட்சியும்  இதற்கான யோசனைகளை  முன்வைத்திருக்கின்றது.

எனவே  அடுத்த கட்டம்  எவ்வாறு  நகரப்போகின்றது என்பதே  இங்கு  மிக  முக்கியமானதாக  இருக்கின்றது.

நாட்டில்  அர­சியல் நெருக்­கடி   ஏற்­பட்­டி­ருக்­கின்ற  தற்­போ­தைய  பின்­ன­ணியில் அர­சியல் ரீதி­யான   மாற்­றங்­களை  ஏற்­ப­டுத்­து­வது தொடர்­பாக    தொடர்ச்­சி­யாக     அர­சியல் கட்­சிகள்  மற்றும்  சிவில் அமைப்­புக்­க­ளினால்  ஆரா­யப்­பட்டு வரு­கின்­றது.

தற்­போது    அர­சாங்கம் பதவி விலக வேண்டும் என்று நெருக்­க­டியை  ஏற்­ப­டுத்­து­கின்ற வகையில் மக்­களின் போராட்­டங்கள் தொடர்ந்து கொண்­டி­ருக்­கின்ற சூழலில் அர­சியல் ரீதியான  பல்­வேறு  திருப்­பு­முனை மாற்­றங்­களை செய்­வ­தற்­கான    சந்­தர்ப்பம்  கிடைத்­தி­ருப்­ப­தா­கவே   அர­சியல் வல்­லு­நர்கள்   சுட்­டிக்­காட்­டு­கின்­றனர்.

மிக முக்­கி­ய­மாக  கடந்த 44 வரு­டங்­க­ளாக இந்த நாட்டில்  கடும் விமர்­ச­னங்­க­ளையும்  எதிர்ப்புகளையும்   சம்­பா­தித்­துக்­கொண்­டி­ருக்­கின்ற    நிறை­வேற்று அதி­காரம் கொண்ட    ஜனாதிபதி   முறை­மையை  மாற்­றி­ய­மைப்­ப­தற்கு  தற்­போது   ஒரு­சி­றந்த அர­சியல் ரீதி­யான  சந்தர்ப்பம்   கிடைத்­தி­ருப்­ப­தா­கவே   தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது.  

ஆனால் அதனை அர­சியல் ரீதி­யாக  ஒருங்­கி­ணைத்து  சகல தரப்­பி­னரும்    ஈடு­பாட்­டுடன்  செயற்பட்டு  அந்த இலக்கை  அடை­வார்­களா  என்­பதே இங்கு கேள்­விக்­கு­றி­யாக  இருக்­கின்­றது .

எனினும்  நாட்டில் தற்­போ­தைய  அர­சியல் நிலை­மை­யா­னது  அதற்­கான ஒரு சந்­தர்ப்­பத்தை  ஏற்­ப­டுத்திக் கொடுத்­திக்­கின்­றது.

அதா­வது மார்ச் மாதம் 31 ஆம் திகதி  அர­சாங்­கத்­துக்கு  எதி­ராக மிரி­ஹானை பகு­தியில்  ஆரம்ப­மான   ஆர்ப்­பாட்டம்  தற்­போது  காலி­மு­கத்­திடல் மற்றும்   ஏனைய பகு­தி­க­ளிலும்  முன்னெடுக்­கப்­பட்டு  வரு­கின்­றது.

ஜனா­தி­ப­தி­யையும்  அர­சாங்­கத்­தையும்  பதவி வில­கு­மாறு கோரியே  இந்த போராட்­டங்கள் முன்­னெ­டுக்­கப்­பட்டு  வரு­கின்­றன.

எப்­ப­டி­யி­ருப்­பினும்  கடந்த மூன்று வாரங்­க­ளாக   மக்­களின் இந்தப் போராட்­டங்கள்  பாரிய மாற்­றங்­களை  தற்­போ­தைய இந்த சூழலில்   ஏற்­ப­டுத்­தி­யி­ருக்­கின்­றன.

முழு அமைச்­ச­ர­வையும் பதவி வில­கி­யமை   சகல  கட்­சி­க­ளையும்  உள்­ள­டக்­கிய இடைக்­கால அரசாங்­கத்தை   அமைக்க   ஜனா­தி­பதி  அழைப்பு விடுத்­தமை  அதனை எதிர்க்­கட்­சிகள் நிராகரித்தமை ,  இளம்  பிர­தி­நி­தி­களை  கொண்ட அமைச்­ச­ரவை நிய­மிக்­கப்­பட்­டமை,  அர­சி­ய­ல­மைப்பு   திருத்­தத்தை செய்ய   தயார் என ஜனா­தி­பதி அறி­வித்­தமை,  19 ஆவது திருத்த சட்­டத்தை   கொண்­டு­வ­ரு­வ­தற்கு நட­வ­டிக்கை எடுப்­ப­தாக  பிர­தமர் தெரி­வித்­தமை,  கட்சித் தலை­வர்கள் கூட்டத்தில் இந்த தீர்­மா­னத்தை பாரா­ளு­மன்ற  சபை முதல் அமைச்சர் தினேஷ்  குண­வர்த்­தன   அறிவித்­தமை  உள்­ளிட்ட பல திருப்­பு­மு­னைகள்  ஏற்­பட்­டுள்­ளன.

அந்­த­வ­கையில்  இந்த மூன்று வார போராட்­டங்கள்  மிக முக்­கி­ய­மான  மாற்­றங்­களை   அர­சியல் கட்­ட­மைப்பில் ஏற்­ப­டுத்­தி­யி­ருக்­கின்­றன.

அதே­நேரம் மிக முக்­கி­ய­மான பல மாற்­றங்­களை  இந்த  புதிய நிலை­மையின் ஊடாக  செய்துகொள்ள முடி­யுமா என்­பதே தற்­போது  ஆரா­யப்­பட்­டுக்­கொண்­டி­ருக்­கின்­றது.

இந்த சூழலில் நிறை­வேற்று அதி­காரம் கொண்ட ஜனா­தி­பதி முறை­மையை  முழு­மை­யாக நீக்குவதற்­காக அர­சி­ய­ல­மைப்பு திருத்த யோச­னையை  பிர­தான எதிர்க்­கட்­சி­யான ஐக்­கிய மக்கள் சக்தி  நேற்று  சபா­நா­யகர்  மஹிந்த யாப்பா  அபே­வர்த்­த­ன­விடம் கைய­ளித்­தது.

தற்­போ­தைய நெருக்­க­டியில் அர­சி­ய­ல­மைப்பு  ரீதி­யாக  எவ்­வா­றான மாற்­றங்­களை  செய்ய முடியும் என்­பது தொடர்­பாக பாரா­ளு­மன்­றத்தில்  சகல கட்­சி­க­ளி­னதும்  பிர­தி­நி­தி­க­ளுடன்  சபா­நா­யகர்  நடத்தி வரு­கின்ற  கலந்­து­ரை­யா­டல்­களில் ஒரு பகு­தி­யா­கவே  ஐக்­கிய மக்கள்  சக்தி இந்த யோச­னையை  பாரா­ளு­மன்­றத்தில்   சபா­நா­ய­க­ரிடம்  கைய­ளித்­தி­ருக்­கி­றது.

இத­னூ­டாக  முழு­மை­யாக  நிறை­வேற்று  அதி­காரம் கொண்ட ஜனா­தி­பதி  முறை­மையை  நீக்­க­வேண்டும் என்ற நிலைப்­பாட்டில் எதிர்க்­கட்சித் தலைவர் சஜித் தலை­மை­யி­லான  ஐக்­கிய மக்கள்  சக்தி இருக்­கின்­றது.

அதே­நேரம் அர­சாங்­கமும்  மீண்டும்  19 ஆவது திருத்­தச்சட்டத்தை  கொண்­டு­வ­ரு­வ­தாக  அறி­வித்­தி­ருக்­கின்­றது.

பிர­தமர் மஹிந்த ராஜ­பக் ஷ  மற்றும்   சபை முதல்வர்   அமைச்சர்  தினேஷ் குண­வர்த்­தன  ஆகியோர்   இந்த  விட­யத்தை உத்­தி­யோ­கபூர்­வ­மாக  அறி­வித்­தி­ருக்­கின்­றனர்.

அந்­த­வ­கையில் ஆளும் கட்சி மற்றும்  எதிர்க்­கட்­சி­களின் இந்த அணு­கு­மு­றைகள்  ஒரு புள்­ளியில் வந்து இணை­வ­தற்­கான சாத்­தி­யத்தை  ஏற்­ப­டுத்­தி­யி­ருக்­கின்­றது.

அர­சாங்­கத்தைப் பொறுத்­த­வ­ரையில்  நிறை­வேற்று  அதி­கா­ர­மு­டைய  ஜனா­தி­பதி முறையை   முழு­மை­யாக நீக்கும் எண்ணம் இல்லை என்றே தெரி­கின்­றது.

மாறாக 19ஆவது   திருத்த சட்­டத்தை மீண்டும் கொண்­டு­வந்து  ஜனா­தி­ப­திக்கு இருக்­கின்ற    அதி­கா­ரங்­களை  குறைப்­ப­தற்­கான  நட­வ­டிக்­கை­க­ளையே  அர­சாங்கம்  எடுக்­கப்­போ­வ­தாக    தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது.

எப்­ப­டி­யி­ருப்­பினும் தற்­போது நடை­மு­றையில் இருக்­கின்ற  20 ஆவது  திருத்த சட்­டத்தை நீக்கி  ஜனா­தி­ப­தியின்  அதி­கா­ரங்­களை குறைக்­கின்ற  19ஆவது திருத்த சட்­டத்தை   மீண்டும்  21 ஆவது  திருத்த சட்­ட­மாக  கொண்­டு­வர முயற்­சிக்­கின்­றமை  அர­சியல் ரீதி­யான  ஒரு மாற்­றத்­துக்கு  வழிகாட்­டி­யாக  அமைந்­தி­ருக்­கின்­றது.

ஆனால்   நிறை­வேற்று  அதி­காரம்   உடைய ஜனா­தி­பதி முறை­மையை  முற்­றாக   நீக்­க­வேண்­டு­மானால்  அதற்கு சர்­வ­ஜன வாக்­கெ­டுப்பு நடத்­தப்­பட வேண்டும்.

தற்­போது  தேர்தல் ஒன்றை  நடத்­தக்­கூ­டிய நிலையில்  நாடு இல்லை  என்­பது  சக­ல­ரதும் கருத்­தாக உள்­ளது.

எனவே  மூன்றில் இரண்டு பெரும்­பான்­மை­யுடன்  19 ஆவது திருத்­தச ட்டத்தை மீண்டும் கொண்டு­வ­ரு­வது  சாத்­தி­ய­மா­க­வுள்ள  ஒரு   முயற்­சி­யாக   காணப்­ப­டு­கின்­றது.

இந்­நி­லையில் ஆளும் கட்சி  மற்றும்  எதிர்க்­கட்சி என சகல தரப்­பி­னரும்  இதனை ஆத­ரிப்­பதால்  அதற்­கான சாத்­தியம்  அதி­க­ரித்­தி­ருப்­ப­தாக தெரி­கின்­றது.

அத­ன­டிப்­ப­டையில்  ஒரு அர­சியல் ரீதி­யான மாற்­றத்­திற்­கான சாத்­தியம்  இருப்­ப­தா­கவே  தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது.

நான்கு பீடங்­க­ளையும்  சேர்ந்த பெளத்த மகா சங்­கங்கள்  புதன்­கி­ழமை இரவு  கடு­மை­யான கார­சா­ர­மான  அறிக்­கை­யொன்றை  வெளி­யிட்­டி­ருந்­தன .

அதா­வது விரை­வாக  20 ஆவது திருத்­தச ட்டத்தை  நீக்கி   19 ஆவது திருத்த சட்­டத்தின்   முக்கியமான விட­யங்­களை உள்­ள­டக்கி   அர­சி­ய­ல­மைப்பு  திருத்­தத்தை  மேற்கொள்ளப்படவேண்டும் என்று   மகா­சங்­கங்கள்  அறி­வித்­துள்­ளன.

இந்த விட­யத்தில்  பிர­தான கட்­சிகள்   தாம­த­ம­டைந்­து­கொண்­டிக்­கின்­றமை  தொடர்­பாக கடும் அதி­ருப்­தி­யையம்  விச­னத்­தையும்     பெளத்த மகா சங்­கங்கள் வெளி­யிட்­டி­ருக்­கின்­றன.

அந்­த­வ­கையில்  மகா சங்­கங்­களின் அறிக்­கை­யை­ய­டுத்து இந்த செயற்­பா­டுகள் விரை­வுப்­ப­டுத்­தப்­படும் என்று தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது.

எனவே மாற்றம் ஒன்­றுக்­கான சாத்­தி­யத்தின் சமிக்ஞை தெரிய ஆரம்­பித்­துள்­ளது.  அதா­வது  நிறை­வேற்று அதி­காரம் கொண்ட ஜனா­தி­பதி முறை­மையில்  மாற்றம் ஏற்­ப­டு­வ­தற்­கான சாத்­தியம் இருப்­ப­தா­கவே  தெரி­கின்­றது .

19 ஆவது திருத்த சட்டம்  மீண்டும்  கொண்­டு­வ­ரப்­படும் பட்­சத்தில்  அதில் பல முக்­கிய விட­யங்கள் காணப்­ப­டு­கின்­றன.

முக்­கி­ய­மாக  தற்­போது காணப்­ப­டு­கின்ற பாரா­ளு­மன்ற பேர­வைக்கு பதி­லாக   அர­சி­யலமைப்பு  பேரவை  உரு­வாக்­கப்­படும்.

அதில்   ஆளும்  எதிர்க்­கட்­சி­களின் பிர­தி­நி­தி­களும்  சிவில் சமூக பிர­தி­நி­தி­களும்  இட­ம­பெ­று­வார்கள். 

அந்த அர­சி­ய­ல­மைப்பு பேர­வையே   நாட்டில்  சுயா­தீன  ஆணைக்­கு­ழுக்­க­ளுக்கு  உறுப்­பி­னர்­களை  நிய­மிக்கும். முக்­கி­ய­மாக   தேர்தல் ஆணைக்­குழு , நிதி ஆணைக்­குழு, நீதி சேவை ஆணைக்­குழு, அரச சேவை ஆணைக்­குழு,  லஞ்ச  ஊழல் எதிர்ப்பு ஆணைக்­குழு உள்­ளிட்ட 9  ஆணைக்­கு­ழுக்கள்   19 ஆவது திருத்த சட்­டத்தின் கீழ்  நிய­மிக்­கப்­படும்.

அதே­போன்று  நாட்டின் பிர­தான  அரச  பத­வி­க­ளுக்­கான   நிய­ம­னங்­களும்   அர­சி­ய­ல­மைப்பு பேர­வையின் ஊடா­கவே  இடம்­பெறும்.

மேலும்  பிர­த­மரை  நிய­மித்தல், அமைச்­சர்­களை நிய­மித்தல் என்­பன   தன்­னிச்­சை­யாக   இடம்­பெற முடி­யாது. மாறாக  இணக்­கப்­பாட்டு  கலந்­து­ரை­யா­டல்கள்      ஊடா­கவே அது தொடர்­பான  முடி­வுகள்  எடுக்­கப்­பட வேண்டும்.

பாரா­ளு­மன்­றத்தை  நான்­கரை  வரு­டங்­க­ளுக்கு பின்­னரே  கலைப்­ப­தற்­கான  அதி­காரம்  ஜனாதி­ப­திக்கு  கிடைக்கும்.

இது­போன்ற பல்­வேறு முக்­கிய விட­யங்கள் 19 ஆவது திருத்தசட்டத்தில் உள்ளடங்குகின்றன.

ஆனால் இந்த  நெருக்கடியான  அரசியல்  சூழலில்  அரசியல் கட்சிகள்  19 ஆவது திருத்த சட்டத்தை மீண்டும் கொண்டுவருவதற்கான ஒருங்கிணைப்பு  செயற்பாடுகளை  எவ்வாறு   ஒருங்கிணைத்து முன்கொண்டு செல்லப்  போகின்றன என்பது முக்கியமாகும்.

நிறைவேற்று அதிகாரமுடைய  ஜனாதிபதி முறைமையின்  அதிகாரங்களை  குறைத்து 19 ஆவது திருத்த சட்டத்தை மீண்டும் கொண்டுவரும்   விடயத்தில் ஆளும், எதிர்க்கட்சிகள் தற்போது    ஒரு குறிப்பிட்ட  அளவிலான  இணக்கப்பாட்டுக்கு  வந்துள்ளன.

பிரதமர் மஹிந்த ராஜபக் ஷவும்  இது தொடர்பில் சாதகமான சமிக்ஞையை  வெளிப்படுத்தியிருக்கின்றார்.

பிரதமர்    பாராளுமன்றத்திலேயே  இது தொடர்பாக அறிவித்திருக்கின்றார்.  அதேபோன்று  தற்போது  எதிர்க்கட்சியும்  இதற்கான யோசனைகளை  முன்வைத்திருக்கின்றது.

எனவே  அடுத்த கட்டம்  எவ்வாறு  நகரப்போகின்றது என்பதே  இங்கு  மிக  முக்கியமானதாக  இருக்கின்றது.  என்ன நடக்கும் என்பதை சகலரும்  பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.

-ரொபட் அன்­டனி-

 

Share.
Leave A Reply

Exit mobile version