உக்ரைன் போர் விவகாரத்தில் தலையிடும் எந்த நாடும் மின்னல் வேக பதிலடியை எதிர்கொள்ள நேரிடும் என ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புதின் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

தம்மிடன் அனைத்து விதமான உபகரணங்களும் உள்ளதாக தெரிவித்த புதின், தேவையேற்படின் அவற்றை பயன்படுத்துவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

உக்ரைன் தொடர்பில் எவரேனும் ஏற்றுக்கொள்ள முடியாத அச்சுறுத்தல்களை உருவாக்கினால், யாராலும் கணிக்கமுடியாத கருவிகளை ரஷ்யா பயன்படுத்தும் என புதின் தெரிவித்துள்ளார்.

உக்ரைனுக்கு ஆதரவளிக்கும் நாடுகள் ஆயுத விநியோகத்தை ஆரம்பித்துள்ளதுடன், இந்த போரில் ரஷ்யாவை உக்ரைன் வெற்றிகொள்ளும் என அமெரிக்கா சூளுரைத்துள்ளது.

கிழக்கில் ரஷ்யாவின் முயற்சிகள் தடைப்பட்டுள்ளதாக மேற்குலக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Share.
Leave A Reply

Exit mobile version