சென்னை: நடிகை சமந்தா இன்று தனது 35வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார்
தமிழ், தெலுங்கு, இந்தி என நடித்து வரும் நடிகை சமந்தா ஆண்டுக்கு 3 கோடி முதல் 6 கோடி வரை சம்பாதித்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
கணவர் நாக சைதன்யாவை விவாகரத்து செய்து தனியாக வாழ்ந்து வரும் சமந்தாவின் ஒட்டுமொத்த சொத்து மதிப்பு எவ்வளவு என்பது குறித்து இங்கே பார்ப்போம்..
இயக்குநர் கெளதம் மேனன் இயக்கத்தில் தமிழில் வெளியான விண்ணைத் தாண்டி வருவாயா படத்தின் தெலுங்கு வெர்ஷனில் நாக சைதன்யாவுக்கு ஜோடியாக சினிமாவில் அறிமுகமானவர் நடிகை சமந்தா.
சென்னை பொண்ணான சமந்தா நாக சைதன்யாவுடன் காதலில் விழுந்த நிலையில், அவரை திருமணம் செய்து கொண்டார்.
சமந்தா விவாகரத்து
4 ஆண்டுகள் திருமண வாழ்க்கை செம ஹேப்பியாக சென்று கொண்டிருந்த நிலையில், திடீரென சமந்தாவுக்கும் நாக சைதன்யாவிற்கும் இடையே கருத்து மோதல் பயங்கர சண்டையாக வெடித்தது. பின்னர் இருவரும் ஒருவரை ஒருவர் பிரிவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தது ஒட்டுமொத்த ரசிகர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
35வது பிறந்தநாள்
1987ம் ஆண்டு ஏப்ரல் 28ம் தேதி சென்னையில் பிறந்தவர் நடிகை சமந்தா. படித்தது, வளர்ந்தது எல்லாமே சென்னையில் தான்.
மாடலிங்கில் ஆர்வம் கொண்ட இவர் இயக்குநர் கெளதம் மேனன் கண்களில் பட ஹீரோயினாக மாறி விட்டார். தமிழ் மற்றும் தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வரும் நடிகை சமந்தா இன்று தனது 35வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார்.
5 கோடி சம்பளம்
நடிகை சமந்தாவுக்கு ஒரு படத்துக்கு 3 முதல் 5 கோடி வரை சம்பளம் வழங்கப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
அதிகபட்சமாக புஷ்பா படத்தின் ஓ சொல்றியா மாமா குத்தாட்ட பாடலுக்கு மட்டும் நடிகை சமந்தா 5 கோடி ரூபாய் சம்பளம் வாங்கியதாகவும், அந்த தொகை புஷ்பா 2 படத்திலும் ஒரு பாடலுக்கு நடனமாட என ஏகப்பட்ட தகவல்கள் வெளியாகி வருகின்றன.
தமிழ், தெலுங்கு மொழிகளில் 65 படங்களுக்கு மேல் இதுவரை சமந்தா நடித்துள்ளார். ஹைதராபாத்தில் உள்ள அன்னபூர்ணா ஸ்டூடியோஸில் சொகுசு பங்களா ஒன்றும், சென்னையில் ஒரு வீடும் நடிகை சமந்தாவுக்கு உள்ளதாக கூறப்படுகிறது. மேலும், நாடு முழுவதும் பல ரியல் எஸ்டேட் சொத்துக்களை வாங்கிக் குவித்து உள்ளார் சமந்தா.
சொகுசு கார்கள்
நடிகை சமந்தாவிடம் BMW 3 series, BMW X5 and Jaguar XFR என மூன்று சொகுசு கார்கள் இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
சொகுசு கார்கள் மீது மற்ற நடிகர்களை போல சமந்தாவுக்கு அதிக ஆர்வம் இல்லை என்றும், சில நேரங்களில் ஆட்டோவில் பயணம் செய்வதை பிரியப்பட்டு சமந்தா செய்வார் என்றும் கூறுகின்றனர்.
எவ்வளவு சொத்து
ஆண்டுக்கு 5 முதல் 8 கோடி வரை நடிகை சமந்தா தற்போது சம்பாதித்து வருகிறார். கடந்த 2010ம் ஆண்டு முதல் 2022 வரை என 12 ஆண்டுகள் சினிமா துறையில் உள்ள நடிகை சமந்தாவிடம் ஒட்டுமொத்தமாக 80 கோடி ரூபாய் வரை சொத்து உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
சமீப காலமாக லீடு ரோலில் பல படங்களில் நடித்து வரும் சமந்தா, சீக்கிரமே 100 கோடி சொத்துக்கு அதிபதி ஆகி விடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. பாலிவுட், ஹாலிவுட் என சமந்தா கலக்க வாழ்த்துக்கள்!