மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் தலைவரும், உலகின் நம்பர்1 பணக்காரருமான பில் கேட்ஸ் கடந்த 1994ம் ஆண்டு மெலிண்டா என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு 3 குழந்தைகள் பிறந்தன.

இந்த நிலையில் கடந்த ஆண்டு மே மாதம் அவர்கள் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதையடுத்து அவர்கள் இருவரும் விவாகரத்து செய்துகொண்டு பிரிந்தனர்.

இந்த நிலையில் பில் கேட்ஸ் அமெரிக்காவில் இருந்து வெளியாகும் ஒரு பத்திரிகைக்கு பேட்டி அளித்துள்ளார்.

அதில் அவர், “27 ஆண்டுகள் திருமண வாழ்க்கைக்கு பிறகு நான் மெலிண்டாவை விட்டு தனியாக பிரிந்தேன். நான் அப்படி வாழ்க்கையில் மாற்றம் செய்து இருக்கக் கூடாது. நான் செய்ததை தவறாக நினைக்கிறேன்.

மெலிண்டாவை விட்டு பிரிந்தபிறகு நான் வேறு ஒரு திருமணம் செய்துகொள்ளவில்லை. அது உங்கள் அனைவருக்குமே தெரியும். மெலிண்டா மீது நான் இன்னும் பாசத்துடனே இருக்கிறேன்.

மெலிண்டாவை மீண்டும் திருமணம் செய்துகொள்ள நான் விரும்புகிறேன். இது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தி கொண்டிருக்கிறேன். எதிர்காலத்தை பொறுத்தவரை எனக்கு என்று எந்த திட்டமும் கிடையாது.

ஆனால் மீண்டும் திருமணம் செய்து கொள்ள வேண்டுமென்ற விருப்பம் மட்டும் உள்ளது. மெலிண்டாவிடம் இருந்து நான் முழுமையாக விலகி செல்லவில்லை. நட்போடு தான் இருக்கிறேன்.

எங்கள் நிறுவனத்தின் நலத்திட்ட அமைப்பு தொடர்பான ஆண்டு கூட்டத்தில் மெலிண்டாவை நான் சந்தித்தேன்.

அப்போது நாங்கள் இருவரும் ஒன்றாக உணவருந்தினோம். ஒன்றாக சேர்ந்து வாழ வாய்ப்பு கிடைத்தால் மகிழ்ச்சி அடைவோம்” இவ்வாறு பில்கேட்ஸ் கூறியுள்ளார்.

Share.
Leave A Reply

Exit mobile version