யாழ்ப்பாணம் கொடிகாமம் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இளைஞன் ஒருவர் சம்பவ இடத்திலையே உயிரிழந்துள்ளார்.

 

கொடிகாமம் பகுதியில் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை அதிகாலை இடம்பெற்ற குறித்த விபத்தில் கொடிகாமம்  கச்சாய் வீதியை சேர்ந்த யோகேஸ்வரன் நிலாந்தன் (வயது 31) என்பவரே உயிரிழந்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் இருந்து சென்ற கப் ரக வாகனமும் , யாழ்ப்பாணம் நோக்கி வந்துகொண்டிருந்த மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதி விபத்துக்கு உள்ளானதில் , மோட்டார் சைக்கிளில் பயணித்த இளைஞன் சம்பவ இடத்திலையே உயிரிழந்துள்ளார் என ஆரம்ப விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

Share.
Leave A Reply

Exit mobile version