ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினின் காதலியும்  உடற்பயிற்சி வீராங்கனையுமான அலினா கபேயவா (38 வயது) மீண்டும் கர்ப்பமாகியுள்ளதாகவும் இதனை அறிந்து  புட்டின் பெரிதும் அதிர்ச்சியடைந்துள்ளதாகவும் திங்கட்கிழமை தகவல் வெளியாகியுள்ளது.

 

உக்ரேன் மீது படையெடுப்பை மேற்கொண்டதால் உலகளாவிய ரீதியில் கடும் கண்டனத்திற்குள்ளாகியுள்ள  விளாடிமிர் புட்டின் (69 வயது)  அலினாவுடன் (38 வயது) 2008 ஆம் ஆண்டிலிருந்து  இரகசிய காதல் தொடர்பைப் பேணி வருவதாகக் கூறப்படுகிறது.

புட்டினுக்கு  அலினாவுடனான காதல் தொடர்பின் மூலம் ஏற்கனவே இரகசியமாக இரு  பிள்ளைகள் உள்ளதாக  அண்மையில் தகவல் வெ ளியாகி   பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில்  அவர்மீண்டும் கர்ப்பமாகியுள்ளதாக அதிர்ச்சித் தகவல் வெ ளியாகியுள்ளது.