உண்டியல் முறையினூடாக அமெரிக்க டொலரை நாணய பரிமாற்றம் செய்வதற்கு முற்பட்ட இருவர் பொலிஸ் விசேட அதிரடிப்படையினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பொரலஸ்கமுவ மற்றும் பில்லேவ பகுதிகளிலேயே இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட இருவரிமும் 47,000 அமெரிக்க டொலர் கைப்பற்றப்பட்டுள்ளதுடன், அவற்றின் பெறுமதி ஒரு கோடியே 71 இலட்சம் ரூபாவாகும் என STF தெரிவித்துள்ளது.

கைது செய்யப்பட்ட இருவரும் கிருலப்பனை சட்டவிரோத சொத்துக்கள் தொடர்பான விசாரணைப் பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

உண்டியல் முறையில் நாட்டின் பல்வேறு பகுதிகளில் நாணய பரிமாற்றம் இடம்பெற்று வருவதாகவும் எதிர்காலத்தில் சோதனை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்படும் எனவும் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் தெரிவித்துள்ளனர்.

Share.
Leave A Reply

Exit mobile version