ஆற்றில் வீசப்பட்ட திமுக பிரமுகர் சக்கரபாணியின் தலையை தேடும் பணியில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.
கடந்த 10ஆம் தேதி மணலி செல்வவிநாயகர் கோவில் தெருவைச் சேர்ந்த சக்கரபாணி உடல் 6 துண்டுகளாக வீடு ஒன்றில் கைப்பற்றப்பட்டது.
திருவொற்றியூர் ஏழாவது வார்டு திமுக பிரதிநிதியாக இருந்தவர் சக்கரபாணி. பைனான்ஸ் தொழில் செய்து வந்த சக்கரபாணி, கடந்த 7ஆம் தேதி திடீரென மாயமானதாக அவரது குடும்பத்தினர் காவல்நிலையத்தில் புகார் அளித்திருந்தனர்.
அப்போது அந்த வீட்டில் சக்கரபாணியின் உடல் ஆறு துண்டுகளாக வெட்டப்பட்ட நிலையில் வைக்கப்பட்டிருந்தது. தலையை மட்டும் காணவில்லை.
இதுகுறித்து தமின்பானு, அவரது நண்பர் வசிம் பாஷா ஆகியோர் கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட்ட நிலையில், பைனான்ஸ் கொடுத்த சக்கரபாணி தன்னை கட்டுப்பாட்டில் வைத்து இருந்ததால் என்னை தவறாக முறையில் பயன்படுத்திக்கொண்டார்.
அவரின் தொடர்பிலிருந்து விடுபட அவரை கொலை செய்ததாக தமின்பானு தெரிவித்தார். மேலும் வசிம் பாஷா, ஆட்டோ ஓட்டுநர் டெல்லி பாபு உதவியுடன் அவரின் தலையை அடையாற்றில் வீசியதாகவும் அதிர்ச்சி தகவலை கொடுத்தார்.
இந்தக் கொலைச் சம்பவம் தொடர்பாக ஆட்டோ ஓட்டுனர் டில்லி பாபு கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்நிலையில் இரண்டு நாட்களாக அடையாறு கூவம் ஆற்றில் சக்கரபாணியின் தலையை தேடும் பணியில் காவல்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.
சக்கரபாணியின் தலைபோன்ற டம்மி தலையை ஆற்றில் போட்டு நீரோட்டத்தில் அதன் நகர்வை வைத்து தேடும் பணி நடைபெற்றது.
முடியாத பட்சத்தில் மீனவர்களை கொண்டு தலையைத் தேட இருப்பதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.