இலங்கை நாடாளுமன்றத்தில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு எதிராகக் கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வியடைந்துள்ளது.
தமிழ் தேசிய கூட்டணியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் கொண்டுவந்த இந்த தீர்மானத்துக்கு எதிராக 119 உறுப்பினர்களும், ஆதரவாக 68 உறுப்பினர்களும் வாக்களித்தனர்.