“எல்லோருக்கும் ஒரு நாள் திருமணம் நடக்கும். நான் மற்றும் எஸ்டிஆர் மட்டும் எஞ்சியிருப்போம்.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக சிம்பு பல சர்ச்சைகளை தாண்டி கடந்த ஆண்டு வெளியான மாநாடு படத்தின் மூலம் திரைத்துரையில் வலுவான தனது ரீ-எண்ட்ரியை கொடுத்தார். தற்போது வெந்து தணிந்தது காடு, பத்து தல, கொரோனா குமார் என பல படங்களை கைவசம் வைத்துள்ள சிம்பு பிஸியாக நடித்து வருகிறார்.

தற்போது 39-வது வயதாகும் சிம்பு தமிழ் சினிமாவில் மோஸ்ட் எளிஜிபுல் பேச்சிலராக வலம் வந்துகொண்டிருக்கிறார்.

இடையில் சில நடிகைகளுடன் காதலில் இருந்த சிம்பு தற்போது தனது பட வேலைகளில் பிஸியாக இயங்கி வருகிறார்.

ஆனாலும் சிம்புவுக்கு எப்போது திருமணம் என்ற கேள்வி மீடியாக்களில் அவ்வப்போது ஒலித்துக்கொண்டுதான் இருக்கிறது.

இந்நிலையில், தற்போது, ஒரு சீரியல் நடிகை தான் சிம்புவை திருமணம் செய்து கொள்ள விரும்புவதாக தெரிவித்துள்ளார்.

ஜீ தமிழ் சேனலின் ‘யாரடி நீ மோகினி’யில் நடித்த பிரபல சீரியல் நடிகை ஸ்ரீநிதி சமீபத்தில் தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் மீம் ஒன்றைப் பகிர்ந்துள்ளார்,

அதில் சிம்பு உணர்ச்சிவசப்படும் படத்துடன் “எல்லோருக்கும் ஒரு நாள் திருமணம் நடக்கும். நான் மற்றும் எஸ்டிஆர் மட்டும் எஞ்சியிருப்போம். என்று சொல்ல அதற்கு ரசிகர்கள் “ஏன் நீங்கள் இருவரும் திருமணம் செய்து கொள்ள கூடாது?” என்று கேள்வி எழுப்பியுள்ளனர்.

அதற்கு கிண்டலாக பதிவிட்டுள்ள ஸ்ரீநிதி, “நல்லா தான் இருக்கும் ஆனால் இப்ப எனக்கு ஆள் இருக்கே” என்று கூறியுள்ளார்.

அவரது பதிவு தற்போது வைரலாகி வருகிறது. ஸ்ரீநிதி சமீபத்தில் அஜித் குமாரின் ‘வலிமை’ படத்தை விமர்சித்து சர்ச்சையில் சிக்கினார். இவரை அஜித் ரசிகர்கள் கடுமையாக ட்ரோல் செய்தனர்.

Share.
Leave A Reply

Exit mobile version