பிரான்ஸ் நாட்டின் கேன்ஸ் திரைப்பட விழாவில் அரைகுறை ஆடையுடன் வந்த பெண் போராட்டக்காரர் ஒருவர் உடலில் உக்ரேன் கொடியின் வண்ணம் தீட்டி முழக்கமிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

உக்ரேன் நாட்டின் சில பகுதிகளை ரஷ்ய படைகள் ஆக்கிரமித்த போது பெண்கள் பாலியல்  பலாத்காரம் செய்யப்பட்ட வழக்குகள் குறித்து விசாரணை நடத்தி வருவதாக உக்ரேன்  அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

உக்ரேனில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறைக்கு  எதிராக பிரான்ஸ் நாட்டின் கேன்ஸ் திரைப்பட விழாவில் பெண் ஒருவர் அரை நிர்வாண கோலத்தில் சிவப்பு கம்பளத்தில் ஓடினார்.

எங்களை பலாத்காரம் செய்வதை நிறுத்துங்கள் என்ற கோஷத்துடன் தனது ஆடையைக் கழற்றி வீசி அரை நிர்வாணமாக நின்றார். அந்த பெண் எதிர்ப்பாளர் உக்ரேனியக் கொடியை தனது உடலில் வரைந்து இருந்தார். அதில் எங்களை கற்பழிப்பதை நிறுத்து” என்ற வார்த்தைகள் எழுதபட்டு இருந்தது. உடனடியாக அதிகாரிகள் அவரை சூழ்ந்து ஆடையைப் போர்த்தி அங்கிருந்து அழைத்துச் சென்றனர்.

இச்சம்பவத்தால் பார்வையாளர்கள் அதிர்ச்சியில் உறைந்து நின்றனர்.

 

Share.
Leave A Reply

Exit mobile version