புத்தளம் ரயில் மார்க்கத்தில் பெரியமுல்லை ரயில் நிலையத்திற்கு அருகில் வேனொன்று ரயிலுடன் மோதி விபத்திற்குள்ளானது.

இந்த விபத்தில் நால்வர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

வேன் மற்றும் ரயிலுக்கிடையில் சிக்கியுள்ள ஒருவரை மீட்கும் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக ரயில் போக்குவரத்து அத்தியட்சகர் காமினி செனவிரத்ன தெரிவித்தார்.

ரயில் கடவை மூடப்பட்டிருந்த சந்தர்ப்பத்தில், அதனை கடந்து செல்ல முற்பட்ட குறித்த வேன், ரயிலுடன் மோதி விபத்திற்குள்ளானதாக அவர் குறிப்பிட்டார்.

புத்தளம் நோக்கி சென்ற ரயிலில் மோதியே வேன் விபத்திற்குள்ளானது.

Share.
Leave A Reply

Exit mobile version