நீதி மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சராக பதவியேற்றுள்ள விஜேதாச ராஜபக்‌ஷ, தனது முதல் பணியாக 21 ஆவது அரசியலமைப்பு திருத்தத்தை மேற்கொள்ளவுள்ளதாக தெரிவித்துள்ளார்.

இதன்போது ஜனாதிபதியின் அதிகாரங்கள் குறைக்கப்படுவதுடன், இரட்டைக் குடியுரிமை பெற்றவர்கள் பாராளுமன்றம் பிரவேசிக்க முடியாத வகையில் திருத்தச் சட்டம் கொண்டுவரப்படும் என தெரிவித்துள்ளார்.

இதன்படி தற்போது இரட்டைக் குடியுரிமை கொண்டுள்ள உறுப்பினர்களின் ஆசனங்கள் இரத்து செய்யப்படும் என நீதி அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

21வது திருத்தத்தை கொண்டு வருவதன் நோக்கங்களில் இதுவும் ஒன்று என நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ மேலும் தெரிவித்தார்.

 

Share.
Leave A Reply

Exit mobile version