பஸ்ஸில் தாயுடன் பயணித்த 3 வயது சிறுமியொன்று விபத்தில் உயிரிழந்துள்ளது.

பஸ்ஸின் யன்னல் வழியாக வெளியே தலையை நீட்டிக்கொண்டு வந்தபோதே இந்த அனர்த்தம் நிகழ்ந்துள்ளது.

மாவனல்லை ரம்புக்கனை வீதியில் மஹவத்தை கிரிகல சந்தியில் வீதியோரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லொறியின் மீது மாவனெல்லை நோக்கி பயணித்த இலங்கை போக்குவரத்து சபை பஸ் ஒன்று மோதியுள்ளது.

விபத்தின் போது குறித்த குழந்தை பஸ் ஜன்னலின் வழியே வௌியே தலையை நீட்டியுள்ள நிலையில் குழந்தையின் தலை லொறியில் பட்டு குழந்தை படுகாயமடைந்துள்ளது.

மாவனல்லை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் குழந்தை உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்த குழந்தை தம்விட உஸ்ஸாபிட்டிய பிரதேசத்தில் வசிக்கும் மூன்றரை வயது குழந்தை என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

Share.
Leave A Reply

Exit mobile version