லிட்ரோ நிறுவனமானது, சமையல் எரிவாயுவின் விலையை மீண்டும் அதிகரிக்க அரசாங்கத்திடம் அனுமதி கோரியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, 12.5 கிலோகிராம் நிறையுடைய சமையல் எரிவாயுவின் விலை 5,000 ரூபாவை விட அதிகரிக்கலாம் என அந்நிறுவனத்தின் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், டொலரின் விலை அதிகரிப்பு, உலக சந்தையில் சமையல் எரிவாயு விலையின் அதிகரிப்பு என்பவற்றால் தற்போதைய விலையில், எரிவாயுவை விற்பனை செய்ய முடியாது என்றும் லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

எனினும் தற்போது 12.5 கிலோகிராம் நிறையுடைய சமையல் எரிவாயுவின் நிர்ணய விலை 4,860 ரூபாய் என்ற போதிலும் விற்பனை முகவர்கள் 5,000 ரூபாய்க்கே விற்பனை செய்வதாக நுகர்வோர் தெரிவிக்கின்றனர்.

Share.
Leave A Reply

Exit mobile version