இலங்கை மின்சார சபை பொறியியலாளர்கள் சங்கம் இன்று நள்ளிரவு முதல் நாடு தழுவிய தொழிற்சங்கப் போராட்டத்தை முன்னெடுக்க தீர்மானித்துள்ள நிலையில், நாடளாவிய ரீதியில் மீண்டும் மின்தடை ஏற்படக் கூடும் என சங்கம் உறுதிப்படுத்தியுள்ளது.

மின்சக்தி அமைச்சருடன் இடம்பெற்ற பேச்சு வார்த்தை தோல்வியில் முடிவடைந்துள்ளதாகவும் சங்கம் குறிப்பிட்டுள்ளது.

பாதுகாப்பு கருதி மின் உற்பத்தி நிலையங்களை மூடும் போது, ​​நள்ளிரவு முதல் அனைத்து மின் உற்பத்தி நிலையங்கள் மற்றும் துணை மின்நிலையங்களில் வேலை செய்வதை மின்சாரசபை பொறியாளர்கள் தவிர்ப்பார்கள் என்றும் குறிப்பிடப்படுகிறது.

இதன் காரணமாக, நாளை காலை முதல் நாடளாவிய ரீதியில் மின்சாரம் தடைப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Share.
Leave A Reply

Exit mobile version