விக்னேஷ் சிவன் – நயன்தாரா திருமண நிகழ்ச்சிகள் நிறைவடைந்தது.  ” கெட்டி மேளம்..

கெட்டி மேளம்..” தாலி கட்டிய விக்னேஷ் சிவன்…வெட்கப் புன்னகையுடன் நயன்தாரா

>

வட இந்திய ஸ்டைலில் உடை… தென்னிந்திய ஸ்டைலில் திருமணம்

தங்கமே ,என் உயிர் ,என் கண்மணி ,இப்போது என் மனைவி என தனது டுவிட்டர் பக்கத்தில் விக்னேஷ் சிவன் சில புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளார்

நயன்தாரா , விக்னேஷ் சிவன் தம்பதியினருக்கு ரசிகர்கள் தங்கள் வாழ்த்தினை தெரிவித்து வருகின்றனர்.

தமிழகத்தில் முதல் முறையாக….! நயன்தாரா-விக்னேஷ் சிவன் திருமண நிகழ்ச்சி ஓடிடியில் வெளியீடு?

திருமண நிகழ்வுகளை சிடி, டிவிடிகளில் பார்த்த காலம் மாறி, தற்போது ஓடிடியில் பார்க்கும் காலம் வந்துள்ளது.

பெரிய நட்சத்திரங்களின் திருமண நிகழ்வு ஒளிபரப்பு உரிமை ஓடிடி தளங்களுக்கு விற்கப்படுவது புது டிரெண்டாக மாறியுள்ளது.

மேற்கு உலக நாடுகளில் நட்சத்திரங்களின் திருமண புகைப்படங்களையம், வீடியோக்களையும் பத்திரிகைகள், தனியார் டிவி சேனல்கள் உரிமம் பெற்று ஒளிபரப்புவது வழக்கமான ஒன்று.

அதே பாணியை தற்போது இந்திய நட்சத்திரங்கள் கடைபிடிக்க தொடங்கி உள்ளனர். கத்ரீனா கைப், விக்கி கவுஷல் திருமண நிகழ்வு அமேசான் ஒடிடி தளத்திற்கு அளிக்கப்பட்டிருந்தது.

பெரிய கட்டுப்பாடுகளுடன் நடைபெற்ற அவர்களின் திருமண நிகழ்வை 80 கோடி ருபாய்க்கு அமேசான் வாங்கியதாக செய்திகள் வெளிவந்தன.

கத்ரீனா கைப் விக்கி கவுஷல் ஜோடியை தொடர்ந்து ஆலியா பட், ரன்பிர் கபூர் திருமண நிகழ்வின் உரிமும் பெயர் குறிப்பிடாத ஒடிடி தளத்திற்கு வழங்கப்பட்ட்டது.

இதற்காக அந்த நிறுவனம் 110 கோடி ருபாய் ஆலியா பட், ரன்பிர் கபூருக்கு வழங்கி உள்ளதாகவும் செய்தி வெளியானது.

இந்த நடைமுறையை தமிழுக்கு முதல் முறையாக அறிமுகப்படுத்தியுள்ளது நயன்தாரா- விக்னேஷ் ஜோடி.திருமண நிகழ்வை பதிவு செய்வதற்கு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதே இந்த கட்டுப்பாடுகளுக்கு காரணமாக சொல்லப்படுகிறது.

நயன்தாரா திருமண நிகழ்வை டாக்குமெண்ட்ரி வடிவில் தயாரித்து தனியார் ஓடிடி தளத்தில் வெளியிட முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும், இயக்குநர் கவுதம் மேனன் இயக்குவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

நயன்தாரா – விக்னேஷ் சிவன் திருமண புகைப்படம் வெளியானது .விக்னேஷ் தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார் .

Share.
Leave A Reply

Exit mobile version