எரிபொருள் நிரப்பும் நிலையத்தில் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸ் அதிகாரி ஒருவருக்கும் இராணுவ அதிகாரி ஒருவருக்கும் இடையில் கைகலப்பு ஏற்பட்டுள்ளது.

வரக்காபொல, தும்மலதெனிய பகுதியில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்திலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இருவருக்கும் இடையில் ஏற்பட்ட வாக்குவாதத்தை அடுத்தே, கைகலப்பாக மாறியுள்ளது.

வாக்குவாதத்தைத் தொடர்ந்து லெப்டினன்ட் கேர்ணல் பொலிஸ் அதிகாரியைத் தாக்கியதை பெட்ரோல் நிலையத்தில் உள்ள சிசிடிவி கெமராவில் பதிவாகியுள்ளது.

சம்பவத்தில் காயமடைந்த பொலிஸ் உத்தியோகத்தர் வரக்காபொல வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.

பொலிஸாரினால் கைது செய்யப்பட்ட லெப்டினன் கேர்ணல் வரக்காபொல நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.

Share.
Leave A Reply

Exit mobile version