Site icon ilakkiyainfo

பிரதமரின் சவாலை ஏற்க தயார் – ஜேவிபி

குறுகியகாலத்திற்குள் நாட்டை தற்போதைய பொருளாதார நெருக்கடியிலிருந்து மீட்டு நாட்டின்  நிலைமையை ஸ்திரப்படுத்துவதற்கு தயார் என ஜேவிபி தெரிவித்துள்ளது.

இதனை செய்தியாளர் மாநாட்டில் தெரிவித்துள்ள ஜேவிபியின் தலைவர் அனுரகுமாரதிசநாயக்க நாடு எதிர்கொண்டுள்ள நெருக்கடிகளிற்கு குறுகிய காலத்திற்குள் தீர்வை காண்பதற்கு தனது கட்சி தயார் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

ஜேவிபி இதனை தனியாக செய்ய விரும்பவில்லை என குறிப்பிட்டுள்ள அவர் இந்த நோக்கத்திற்கு இலங்கை மக்களும் வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்களும் ஆதரவளிப்பாளர்கள் என நம்பிக்கை கொண்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

நானோ அல்லது ரணில்விக்கிரமசிங்கவோ நீண்டகாலம் பிரதமர் பதவியில் நீடிக்க முடியாது இதன் காரணமாக குறுகிய காலத்திற்குள் ஆறு மாதத்திற்குள் நாட்டின் நிலைiயை ஸதிரமானதாக்கவேண்டும்,பொருளாதார நெருக்கடிக்கான அடிப்படை காரணங்களிற்கு தீர்வை காண்பதன் மூலம் இதனை செய்யவேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதன் பின்னர் பொதுத்தேர்தலொன்றை நடத்தி மக்களின் புதிய ஆணையுடன் புதிய அரசாங்கத்தை நியமிக்கவேண்டும்,பொருளாதார நெருக்கடிக்கான முக்கிய விடயங்களிற்கு தீர்வை காண்பதற்குபுதிய அரசாங்கத்தினால் தான் முடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

தற்போதைய நெருக்கடியை ஆட்களை மாற்றுவதன் மூலம் அல்லது பதவிகளை மாற்றுவதன் மூலம் செய்ய முடியாது குறிப்பாக மக்களின் ஆதரவை இழந்த அரசாங்கத்தினால் இதனை சரிசெய்ய முடியாது என ஜேவிபியின் தலைவர் தெரிவித்துள்ளார்.

ஜேவிபியின் தலைவர் தனது பொருளாதார கொள்கைகளை நடைமுறைப்படுத்த அனுமதிப்பதற்காக தான் பதவி விலக தயார் என  பிரதமர் தெரிவித்திருப்பது குறித்த கேள்விக்கு பதிலளித்துள்ள அனுரகுமாரதிசநாயக்க அந்த பணியை ஏற்பதற்கு தான் தயார் என தெரிவித்துள்ளார்.

நான் அந்த சவாலை ஏற்றுக்கொண்டு எனது நடவடிக்கைகளை முன்னெடுக்கவேண்டும் என்றால் ஜனாதிபதியும் பிரதமரும் பதவி விலகவேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Exit mobile version