இலங்கையின் பதில் ஜனாதிபதியாக (Acting President) ரணில் விக்ரமசிங்க பதவி ஏற்றுக்கொண்டார்.

பிரதம நீதிபதி ஜயந்த ஜயசூர்ய முன்னிலையில் ரணில் விக்ரசிங்க, பதில் ஜனாதிபதியாக பதவியேற்றுள்ளதாக பிரதமர் அலுவலகம் தெரிவிக்கின்றது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, நேற்றைய தினம் பதவி விலகியதை அடுத்து, அதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பை சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன இன்று அறிவித்தார்.

இந்த நிலையில், பதில் ஜனாதிபதியாக ரணில் விக்ரமசிங்க சற்று முன்னர் பதவி பிரமானம் செய்துக்கொண்டுள்ளார்.

Share.
Leave A Reply

Exit mobile version