தமிழகத்தில் இருந்து இலங்கைக்கு வழங்கப்படும் மூன்றாம் தொகுதி உதவி பொருட்கள் இன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

இந்திய மக்களவை உறுப்பினரும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் மகளிரணிச் செயலாளர் கனிமொழி கருணாநிதியின் தலைமையில் இதற்கான நிகழ்வு இன்று இடம்பெற்றுள்ளது.

இதற்கமைய 74 கோடி இந்திய ரூபா பெறுமதியான உதவி பொருட்கள் இவ்வாறு அனுப்பப்பட்டுள்ளன.

அத்தியாவசிய பொருட்களான அரிசி, பால்மா மற்றும் மருத்துப் பொருட்கள் என்பன இவ்வாறு தூத்துக்குடி துறைமுகத்தில் இருந்து அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Share.
Leave A Reply

Exit mobile version