மாத்தறை, பிடபெத்தர பகுதியில் நில்வள கங்கையில் நீராடச் சென்று காணாமல் போன இளைஞனின் காதலி (19 வயது) தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

நில்வள கங்கையின் கிளை ஆறான கிரமாரா ஓயாவில் குதித்து இவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

நேற்று (27) காலை தேடுதல் நடவடிக்கையின் போது அவரது சடலம் கண்டெடுக்கப்பட்டது.

மாத்தறை, பிடபெத்தர, நில்வள கங்கையில் நீராடச் சென்று காணாமல் போன நான்கு இளைஞர்களில் மூவரின் சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

எனினும், தற்கொலை செய்துகொண்ட பெண்ணின் காதலனை தேடும் நடவடிக்கைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்படுகின்றன. (

Share.
Leave A Reply

Exit mobile version