முன்னாள் ஜனாதிபதிக்காக அரசாங்கம் 400 மில்லியன் அல்ல 4 ரூபா கூட செலவழித்ததில்லை என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் புதன்கிழமை (31) இடைக்கால வரவு செலவு திட்ட அறிக்கை தொடர்பான விவாவதத்தில் ஐக்கிய மக்கள் சக்தி உறுப்பினர் ரோஹண பண்டார உரையாற்றுகையில்,

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ்வின் வீட்டை புதுப்பிப்பதற்காக 400 மில்லியன் ரூபா அமைச்சரவைக்கு சமர்ப்பித்து அனுமதித்துக்கொண்டுள்ளதாக தகவல் கிடைத்திருக்கின்றது என குறிப்பிட்டிருந்தார்.

இதன்போது அவசரமாக சபைக்குள் வந்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, ஒழுங்கு பிரச்சினை ஒன்றை எழுப்பி தெளிவுபடுத்தி குறிப்பிடுகையில்,

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ்வுக்காக 400 மில்லியன் ரூபா அல்ல, 4ரூபா கூட செலவழித்ததில்லை.

என்றாலும் முன்னாள் ஜனாதிபதிகள் மற்றும் அவர்களின் விதவைகளுக்காகவும் வீடுகள் வழங்கி, அவர்களை கவனித்துக்கொள்ள அரசாங்கத்துக்கு பொறுப்பு இருக்கின்றது என்பதை தெரிவித்துக்கொள்கின்றேன் என்றார்.

Share.
Leave A Reply

Exit mobile version