நாகை: முதலிரவு அறைக்குள் சென்ற மணப்பெண் அலறி மயக்கமடைந்த நிலையில், கதவை திறந்து கொண்டு வேகமாக வெளியே ஓடினார் மாப்பிள்ளை.. இந்த சம்பவம் தொடர்பான தகவல்கள் தற்போது வெளியாகி உள்ளது.

நாகப்பட்டினம் மாவட்டம் தொழுதூரைச் சேர்ந்தவர் ராஜ்குமார்.. இவருக்கும் திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூரை சேர்ந்த பெண்ணுக்கும், கடந்த 27ம் தேதி திருமணம் நடைபெற்றது.

திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூரில் நாகராஜ் – பரமேஸ்வரி தம்பதியரின் மகள் நளினி.. இவருக்கு 26 வயதாகிறது.. நாகப்பட்டினம் மாவட்டம் திருக்குவளை அடுத்து உள்ள தொழுதூரைச் சேர்ந்த 37 வயதான ராஜ்குமார் என்பவருக்கு இவரை, இரு வீட்டு பெற்றோர்களும் திருமணம் செய்து வைத்தனர்..

பெண் அலறல்
ஒரு மாதத்துக்கு முன்பு இந்த திருமணம் நடந்தது. அன்றைய தினம் இரவு, தம்பதியருக்கு மணமகன் வீட்டில், முதலிரவு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தது.

முதலிரவு அறையில் அதற்கான முழு ஏற்பாடுகளும் செய்யப்பட்ட நிலையில், தம்பதிகள் இருவரும் முதலிரவு அறையில், தனிமையில் இருந்து உள்ளனர்.

அப்போது, திடீரென அந்த பெண் அலறி கத்தியுள்ளார்.. ஆரம்பத்தில் அந்த பெண் சத்தம்போடும்போது, குடும்பத்தினர் பெரிதாக எடுத்து கொள்ளவில்லை.. தொடர்ச்சியாக அலறல் சத்தம் கேட்கவும், அந்த ரூமுக்கு ஓடிச்சென்று கதவை தட்டி உள்ளனர்..

முதலிரவு – அலறல்
குடும்பத்தினர் கதவை பலமாக தட்டவும், பயந்துபோன மாப்பிள்ளை, வேறு வழியின்றி கதவை திறந்து உள்ளார்… கதவை திறந்த வேகத்திலேயே, அங்கிருந்து மாப்பிள்ளை தப்பித்து வெளியே ஓடினார்..

அப்படி ஓடும்போது, “ஐயோ.. அது பெண்ணே அல்ல… திருநங்கை” என்று சத்தமிட்டு கொண்டே ஓடினாராம் ராஜ்குமார்.

இதனால் ஒன்றும் புரியாமல் விழித்த குடும்பத்தினர், ரூமில் சென்று பார்த்தபோது, உடல் முழுவதும் ரத்த காயங்களுடன் கீழே மயங்கி விழுந்து கிடந்தார் கல்யாண பெண்..

கல்யாண பெண்
இதனால் பதறிபோன குடும்பத்தினர். அவரை உடனடியாக மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்த்தனர்..

திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனையில் தீவிரமான சிகிச்சை தரப்பட்டது.. அதற்கு பிறகு மகளிர் போலீசுக்கு புகார் தந்தனர்.. மனநலம் பாதித்தவர் போல நடந்து கொண்ட மாப்பிள்ளை ராஜ்குமாரை உடனே கைது செய்து, தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புகார் தரப்பட்டது.

இதையடுத்து, தப்பித்து ஓடிய ராஜ்குமாரை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது.. தொடர்ந்து போலீசார் ராஜ்குமாரை தேடி வந்த நிலையில், 2வது நாளே மாப்பிள்ளை சிக்கினார்..

“முதலிரவு”
கைது செய்து நாகை மாவட்ட ஜெயிலிலும் அடைத்தனர்.. கட்டிய மனைவியாக இருந்தாலும், அவர் அனுமதி இல்லாமல் தொடக்கூடாது என்று தனி சட்டமே இருக்கும் நிலையில், மனைவியின் அனுமதி இல்லாமல் மிருகத்தனமாக, பாலியல் வன்புணர்வில் ஈடுபட்ட ராஜ்குமார் மீது 5 பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

மாப்பிள்ளை மனநிலை பாதித்தவர் என்று பெண் தரப்பில் சொன்னார்கள்.. மணப்பெண் “திருநங்கை” என்று மணமகன் சொன்னார்..

இப்படி இரு தரப்பிலுமே மாறி மாறி குற்றச்சாட்டுகள் வீசப்பட்ட நிலையில், இந்த சம்பவம் அப்போது மிகப்பெரிய பரபரப்பை, நாகப்பட்டினத்தில் ஏற்படுத்தியது.. இதையடுத்து மாப்பிள்ளையிடம் விசாரணை நடத்தப்பட்டது..

உறவு
அப்போது, இயற்கைக்கு மாறான உறவுக்கு, மணப்பெண்ணை அவரது கணவர் அழைத்துள்ளதும், ஆனால் மணப்பெண் சம்மதிக்கவில்லை என்பதும் தெரியவந்தது..

இந்த விஷயம் தொடர்பாக, இருவருக்கும் இடையே, அந்த ரூமில் சிறிது நேரம் வாக்குவாதமும் ஏற்பட்டிருக்கிறது.. ஒரு கட்டத்தில் பொறுமை இழந்த மாப்பிள்ளை, மணப்பெண்ணை சரமாரி தாக்கியிருக்கிறார்..

மேலும், அந்த பெண்ணின் உடம்பெல்லாம் பலஇடங்களில் கடித்துள்ளதும் நிரூபணமானது.. இந்நிலையில், சிறையில் அடைக்கப்பட்டிருந்த ராஜ்குமார், தற்போது ஜாமீனில் வெளிவந்துள்ளாராம்.

Share.
Leave A Reply

Exit mobile version