தமிழ் திரை உலகின் பிரபல தயாரிப்பாளர் ரவீந்திரன் சின்னத்திரை நடிகை மகாலட்சுமியை திருமணம் செய்துகொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது
தமிழ் திரையுலகின் முன்னணி தயாரிப்பு நிறுவனமாக லிப்ரா புரோடக்ஷன்ஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் ரவீந்திரன் சந்திரசேகர், சுட்டகதை நட்புனா என்னானு தெரியுமா, முருங்ககன்காய் சிப்ஸ் உள்ளிட்ட படங்களை தயாரித்துள்ளார்.
மேலும் பிக்பாஸ் நிகழ்ச்சியை விமர்சனம் செய்பவராக பலராலும் அறியப்பட்ட இவர், பிக்பாஸ் சீசன் 4 குறித்து வெளியிட்ட விமர்சனம் வைரலாக பரவியது.
தயாரிப்பாளர் மற்றும் விநியோகஸ்தர் என்று வலம் வந்த ரவீந்திரன் சந்திரசேகர், தற்போது சின்னத்திரை நடிகை மகாலட்சுமியை திருமணம் செய்துள்ளார்.
சன்டிவியில் விஜேவாக சின்னத்திரைக்கு வந்த மகாலட்சுமி அரசி என்ற தொடரில் நடித்துள்ளார்.
தொடர்ந்து வாணி ராணி. பொண்ணுக்கு தங்கமனசு, தாமரை உள்ளிட்ட தொடர்களில் நடித்த மகாலட்சுமியை ஜீ தமிழின் தேவதையை கண்டேன் தொடர் ரசிகர்கள் மத்தியில் பிரபலப்படுத்தியது.
இதனிடையே தற்போது நடிகை மகாலட்சுமி – தயாரிப்பாளர் ரவீந்திரன் சந்திரசேகரை திருமணம் செய்துகொண்டுள்ளார்.
இவர்களது திருமணம் திருப்பதியில் நடைபெற்றது. திருமணம் தொடர்பான புகைப்படத்தை தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ள ரவீந்திரன், தனது பதிவில் மகாலட்சுமி போல் பொண்ணு கிடைச்சா வாழ்க்கை நல்லாருக்கும்னு சொல்வாங்க ஆனா மகாலட்சுமியே கிடைச்சா என்று பதிவிட்டு தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.
இந்த பதிவை பார்த்த ரசிகர்கள் பலரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வரும் நிலையில். இந்த படங்கள் அனைத்தும் இணையத்தில் வைரலாகி வருகிறது.