முதல் திருமணத்தை மறைத்தாரா நகைச்சுவை நடிகர் புகழ்… ரசிகர்கள் வெளியிட்ட ஆதாரம்

சென்னை: குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலமாக பலருக்கும் பரிச்சயமான புகழ் செய்த செயலை தற்போது நெட்டிசன்கள் சமூக வலைத்தளத்தில் வெட்ட வெளிச்சமாகி இருக்கின்றனர்.

ஒரு சில நாட்களாக புகழுடைய திருமண புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் பரவிக் கொண்டிருக்கும் நேரத்தில் இவருக்கு ஏற்கனவே திருமணம் முடிந்து விட்டது என்று நெட்டிசன்கள் தங்கள் ஆதாரத்தை வெளியிட்டு வருகிறார்கள்.

புகழ் ஏற்கனவே காதலித்து திருமணம் செய்த பெண்ணை தான் தற்போது மீண்டும் திருமணம் செய்து இருக்கிறார் என்ற செய்தி பலருக்கும் வியப்பாகவும் அதே சமயத்தில் அதிர்ச்சியாகவும் இருந்து வருகிறது என்று ரசிகர்கள் தங்களுடைய கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

ஏழ்மையிலும் விடாத முயற்சி

கடலூரை சார்ந்த புகழ் ஏழ்மையான குடும்பத்தை சேர்ந்தவராகத் தான் இருந்திருக்கிறார். நடிப்பின் மீது இருந்த ஆர்வத்தின் காரணமாக இவர் சென்னை கிளம்பி சென்றிருக்கிறார்.

சென்னை வந்த நேரத்தில் இவருக்கு சரியான வேலை கிடைக்காமல் இருந்திருக்கிறது. திரைப்படங்களிலும், சின்னத்திரைையிலும் கலந்து கொள்வதற்கு வாய்ப்பு ஆரம்பத்தில் கிடைக்காமல் இருந்திருக்கிறது.

அந்த நேரத்தில் புகழ் கார் செட் ஒன்றில் வேலை செய்து அங்கே தான் தங்கி இருந்திருக்கிறார்.

அங்கே இருந்து தான் டிவி நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக வாய்ப்புகளைத் தேடிக் கொண்டிருக்கிறார்.

அப்போது விஜய் டிவியில் ஒரு சில நிகழ்ச்சிகளில் இவருக்கு சைடு ரோலில் நடிக்க வாய்ப்பு கிடைத்து இருக்கிறது.

கதாநாயகனாக அறிமுகம்
தனக்கு கிடைத்த வாய்ப்புகளை சரியாக பயன்படுத்தி ஆரம்பத்தில் பெண் வேடமிட்டு பலரை சிரிக்க வைத்தாலும் தன்னுடைய நிஜ முகத்தை குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலமாகத்தான் பலருக்கும் புகழ் காட்டி இருந்தார்.

குக் வித் கோமாளி நிகழ்ச்சி புகழுக்கு பெரிய அளவில் அடையாளத்தை கொடுத்திருந்தது. தற்போது சின்ன திரையில் இருந்து வெள்ளி திரையில் காமெடி நடிகராக அறிமுகம் ஆகி கதாநாயகனாகவும் ஆகிவிட்டார்.

புகழ் கதாநாயகனாக நடித்த திரைப்படம் விரைவில் வெளியாக இருக்கும் நிலையில் அவர் திடீர் திருமணம் செய்து அனைவருக்கும் இன்ப அதிர்ச்சியை கொடுத்திருக்கிறார்.

வெளியானது ஆதாரங்கள்
புகழுடைய திருமணம் எளிமையான முறையில் கோவிலில் நடைபெற்று இருந்தாலும், அவருடைய திருமண வரவேற்பு சென்னையில் பிரபலங்களோடு கொண்டாடப்படுவதாக இருக்கிறது என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.

இந்த நிலையில் புகழ் தற்போது திருமணம் செய்து கொண்டது அவருடைய மனைவியான பென்சியாவை ஒரு வருடத்திற்கு முன்பே திருமணம் செய்துவிட்டார்.

இவர்கள் இருவரும் வெளி உலகத்திற்கு தங்களை கணவன் மனைவி என்று காட்டிக் கொள்ளாமல் தான் வாழ்ந்து வந்தனர் என்ற ரகசியத்தை நெட்டிசன்கள் சமூக வலைத்தளத்தில் கசிய விட்டு இருக்கின்றார்கள்.

வெடிக்கும் கருத்துப்போர்

புகழ் மற்றும் பென்சியா திருமணம் தந்தை பெரியார் திராவிட கழக பொதுச்செயலாளர் கு.ராமகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்றதாக சில புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் பரவி வருகிறது.

கோவையில் உள்ள பெரியார் படிப்பகத்தில் வைத்து இவர்கள் இருவருடைய திருமணம் ஏற்கனவே எளிமையாக முடிக்கப்பட்டு பதிவு செய்யப்பட்டது என்று நெட்டிசன்கள் கூறி வருகின்றனர்.

எப்படி இருந்தாலும் புகழ் தன்னுடைய மனைவியை முறைப்படி மீண்டும் திருமணம் செய்து விட்டார் அதனால் உங்களுக்கு என்ன என்று புகழுடைய தீவிரமான ரசிகர்கள் நெட்டிசன்களுக்கு பதில் அளித்து வருகிறார்கள்.

Share.
Leave A Reply

Exit mobile version