பணம் கொடுக்க முடியாததால் கர்ப்பிணியை நடுரோட்டில் இறக்கிவிட்டதாக உறவினர் குற்றச்சாட்டு அந்தப் பெண் சாலையோரம் அமர்ந்திருக்கும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
லக்னோ: உத்தர பிரதேச மாநிலத்தில், 1000 ரூபாய் கொடுக்காததால் கர்ப்பிணி பெண்ணை அரசு ஆம்புலன்சில் இருந்து இறக்கிவிட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
ஹமிர்பூர் மாவட்டம் பந்தாரி கிராமத்தில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. இதுதொடர்பாக அந்த பெண்ணின் உறவினர் ஒருவர் கூறுகையில், ‘1000 ரூபாய் கொடுத்திருந்தால் கர்ப்பிணி பெண்ணை ஆம்புலன்ஸ் டிரைவர் மருத்துவமனையில் இறக்கி விட்டிருப்பார்.
ஆனால் பணம் கொடுக்க முடியாததால் நடுரோட்டில் இறக்கிவிட்டார்’ என குற்றம்சாட்டினார்.
வலியால் துடித்தபடி அந்த கர்ப்பிணி பெண் சாலையோரம் அமர்ந்திருக்கும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.