ஜெனிவாவில் நடைபெற்று வரும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் (UNHRC) 51வது அமர்வில் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர் அலுவலகத்தின் இலங்கை தொடர்பான அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
ஐ.நா மனித உரிமைகளுக்கான பதில் உயர்ஸ்தானிகர் நடா அல் நஷிப் இலங்கை தொடர்பான அறிக்கையை இன்று சபையில் சமர்ப்பித்தார்.
அறிக்கையை முன்வைத்த நடா அல்-நஷிப், இலங்கையின் நிலை மிகவும் பலவீனமாக இருப்பதாகவும், மனித உரிமை மீறல்களுக்கு பொறுப்புக்கூற வேண்டும் என்றும் கூறினார்.