சவுதி அரேப்யாவை சேர்ந்தவர் அபு அப்துல்லா ( வயது 63) சவுதி அரேபியாவை சேர்ந்தவர். இவருக்கு மொத்தம் 53 மனைவிகள் உள்ளனர்.
இந்த அனுபவம் குறித்து சவுதிக்கு சொந்தமான எம்பிசி தொலைக்காட்சிக்கு அபு அப்துல்லா அளித்த பேட்டியில் கூறியதாவது:-
முதன்முதலில் நான் ஒரு பெண்ணை திருமணம் செய்தேன். நாங்கள் இருவரும் சந்தோசமாகவே வாழ்க்கையை தொடங்கினோம்.
ஆனால், திடீரென எங்களுக்குள் மனஸ்தாபம் வந்துவிட்டது. தொடர்ந்து தகராறு, மனவருத்தம் போன்றவை இருந்ததால், அதிலிருந்து விடுபட நான் 2வது பெண்ணை திருமணம் கொண்டேன்.
முதல் மனைவியால் எனக்கு மனரீதியான பாதிப்புக்கு, இந்த 2வது மனைவி மருந்தாக பயன்பட்டார்.
ஆனால் 2வது மனைவியுடனும் கருத்து வேறுபாடு வந்துவிட்டது. முதல் மனைவிக்கும், 2வது மனைவிக்கும் ஒத்துப்போகவில்லை.
அதனால், இந்த 2 மனைவிகளுடன் ஏற்பட்ட பிரச்சனைகளை மறக்க, 3வது திருமணம் செய்து கொண்டேன்..
இப்படியே ஒவ்வொரு மனைவியையும் விவாகரத்து செய்துவிட்டு, மொத்தம் 53 திருமணம் வரை செய்துகொண்டேன்.
ஆனால் ஒன்று மட்டும் உறுதி, உடல் சுகத்துக்காக நான் இத்தனை திருமணங்களை செய்து கொள்ளவில்லை.. மனரீதியாக நான் நிம்மதியாக இருக்கணும்.
மனம் ஸ்திரத்தன்மையுடன் இருக்கணும், சந்தோஷமாக இருக்கணும் என்பதற்காகவே நான் திருமணம் செய்து கொண்டேன்.
அதிலும் வயது முதிர்ந்த பெண்ணை திருமணம் செய்வதன் மூலம் ஸ்திரத்தன்மை உருவாகிறது.
நான் மணம் முடித்த அத்தனை பெண்களும் பேரழகு” என்கிறார் அப்துல்லா. அதாவது, அப்துல்லா கல்யாணம் செய்த எல்லா மனைவிகளுடனும் தகராறு வந்துள்ளது. அதேசமயம், எந்த பிரச்சனையும் மனைவியுடன் பேசி தீர்த்து கொள்ள அப்துல்லா விரும்பவில்லை என தெரிகிறது.
சண்டையில் இருந்து எஸ்கேப் ஆகிவிட வேண்டும், மனநிம்மதியுடன் ஜாலியாக இருக்க வேண்டும் என்பதற்காகவே, அடுத்தடுத்து இவர் திருமணம் செய்வதாக கூறியுள்ளது வியப்பை தருகிறது. 20 வயதில் முதல் கல்யாணம் அப்துல்லாவுக்கு நடந்துள்ளது.
மனைவிக்கு அவரை விட 6 வயது மூத்தவர். 23 வயதிலேயே 2வது திருமணம் செய்து கொண்டுள்ளார்.
அனைத்து திருமணங்களையும் பாரம்பரிய முறைப்படி செய்துள்ளார்.. பெரும்பாலும் சவுதிலேயே இந்த திருமணங்கள் நடந்துள்ளன.
இதில் முக்கிய அமசம் என்னவென்றால், ஒருநாள் வேலை விஷயமாக வெளிநாட்டுக்கு போனார்.
அங்கேயே ஒரு வெளிநாட்டு பெண்ணை பார்த்து பிடித்துபோய், உடனே அவரையும் கல்யாணம் செய்து கொண்டார்.
இப்போது விஷயம் என்னவென்றால், இனிமேல் யாரையும் கல்யாணம் செய்து கொள்ள மாட்டேன் என்று தற்போது முடிவெடுத்துவிட்டாராம் அப்துல்லா.
சவுதி அரேபியா மற்றும் அரபு மற்றும் இஸ்லாமிய நாடுகளில் சமீப காலங்களில் ஒன்றுக்கு மேற்பட்ட பெண்களை திருமணம் செய்து கொள்பவர்களின் எண்ணிக்கை வெகுவாக குறைந்து வருகிறதுது.
அதிகரித்து வரும் வாழ்க்கைச் செலவுகள் மற்றும் குழந்தைப் பேறு, கல்வி, சுகாதாரம் மற்றும் போக்குவரத்துக்கான தேவைகளும் குறைவதற்குக் இதற்கான காரணமாகும்.