Site icon ilakkiyainfo

எலிசபெத் மகாராணிக்கு அஞ்சலி ; வரிசையில் முதலிடம் பிடித்த இலங்கை வம்சாவளி பெண்

பிரித்தானியாவில் வெஸ்ட்மின்ஸ்டர் அபேயில் மகாராணி இரண்டாம் எலிசபெத்துக்கு இறுதி அஞ்சலி செலுத்தும் வரிசையில் இலங்கை வம்சாவளியைச் சேர்ந்த 56 வயதான தமிழ் பெண் வனேசா நந்தகுமாரன் முதலிடம் பெற்றுள்ளார்.

ராணி இரண்டாம் எலிசபெத் இறுதி சடங்கில் பல்லாயிரக்கணக்கான மக்கள் அவருக்கு அஞ்சலி செலுத்த வரிசையில் நிற்பதாக கூறப்படுகிறது.

லண்டனில் இறுதிச் சடங்குகளுக்காக திங்கட்கிழமை தொடங்கிய வரிசையில் காத்திருந்த முதல் நபராக இலங்கை வம்சாவளியைச் சேர்ந்த வனேசா நந்தகுமாரன் உள்ளார்.

தனது குடும்பத்தினர் பிரித்தானிய அரச குடும்பத்தின் பெரும் அபிமானிகள் என வனேசா நந்தகுமாரன் குறிப்பிட்டுள்ளார்.

அவர்கள் இலங்கைக்கு வழங்கிய சுதந்திரத்திற்கு நன்றி செலுத்தும் தருணம் இது என்றும் அவர் கூறினார்.

வெஸ்ட்மின்ஸ்டர் மண்டபத்தில் வைக்கப்பட்டுள்ள மகாராணியின் உடலுக்கு எதிர்வரும் திங்கட்கிழமை வரை பொதுமக்கள் அஞ்சலி செலுத்துவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

Exit mobile version