டெல்லியை அடுத்த வதோதரா பகுதியை சேர்ந்த 40 வயதான பெண் ஒருவர் போலீசில் ஒரு புகார் கொடுத்தார்.

கடந்த 2014-ம் ஆண்டு பெண்ணுக்கும் வாலிபருக்கும் பெற்றோர் முன்னிலையில் திருமணம் நடந்தது.

புதுடெல்லி: டெல்லியை அடுத்த வதோதரா பகுதியை சேர்ந்த 40 வயதான பெண் ஒருவர் போலீசில் ஒரு புகார் கொடுத்தார்.

இந்த புகார் தொடர்பாக போலீசார் கூறியதாவது:- எனது கணவர் ஒரு சாலை விபத்தில் இறந்து விட்டார்.

எனக்கு பெற்றோர் 2-வது திருமணம் செய்து வைக்க திருமண தகவல் மையத்தில் பதிவு செய்தனர்.

இதன்மூலம் டெல்லியை சேர்ந்த வாலிபர் ஒருவரை எனக்கு திருமணம் செய்து வைக்க பெற்றோர் முடிவு செய்தனர்.

கடந்த 2014-ம் ஆண்டு எனக்கும் அந்த வாலிபருக்கும் பெற்றோர் முன்னிலையில் திருமணம் நடந்தது.

எனது முதல் கணவர் மூலம் பிறந்த மகளுடன் நாங்கள் மூவரும் தனியாக வசித்து வந்தோம்.

திருமணம் முடிந்த பின்பு நாங்கள் இருவரும் தேனிலவுக்கு காஷ்மீர் சென்றோம்.

அப்போது எனது கணவர் என்னுடன் உறவு கொள்ள மறுத்தார். தனக்கு உடல் நலக்குறைவு இருப்பதால் இப்போதைக்கு உறவு கொள்ள வேண்டாம் என்றார்.

நானும் அதனை நம்பினேன். ஆனால் மாதங்கள் பல கடந்த பின்னரும் அவர் என்னோடு உறவு கொள்வதில்லை.

கணவரின் நடத்தை எனக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது. இது பற்றி நான் அவரிடம் கேட்டபோது கொல்கத்தா சென்று ஆபரேசன் செய்து கொண்டால் எல்லாம் சரியாகி விடும் என்றார்.

அதற்காக கொல்கத்தாவுக்கும் சென்றார். ஆபரேசன் செய்த பின்பும் அவர் சரியாகவில்லை.

அதன்பின்பு அவர் செய்து கொண்ட ஆபரேசன் என்ன என்று விசாரித்த போதுதான் அது பெண்ணாக இருந்து ஆணாக மாறுவதற்கான பாலியல் மாற்ற ஆபரேசன் என தெரியவந்தது.

இதனை கண்டுபிடிக்க எனக்கு 8 ஆண்டுகள் ஆகிவிட்டது. இதுபற்றி அவரிடம் கேட்டபோது அவர் என்னை மிரட்டுகிறார்.

இயற்கைக்கு மாறான உறவு கொண்டு என்னை சித்ரவதை செய்த கணவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அந்த புகார் மனுவில் கூறியதாக போலீசார் தெரிவித்தனர். மேலும் இது தொடர்பாக அந்த வாலிபர் மீது வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். டெல்லி பெண்

 

Share.
Leave A Reply

Exit mobile version