மறைந்த எலிசபெத் ராணியின் உடல் மீது அவர் அணிந்திருந்த கிரீடம் வைக்கப்பட்டிருப்பது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

எலிசபெத் ராணியின் தந்தை 6 ஆம் ஜார்ஜ் மன்னர் அவர் முதல் முதலில் மகுடம் சூட்டிக் கொண்ட பொழுது உருவாக்கப்பட்டதுதான் இந்த கிரீடம்.

நாடாளுமன்ற சிம்மாசனத்தில் அமரும்போது ஆண்டுக்கு ஒரு முறை ராணி கிரீடத்தை பயன்படுத்துவார் என தெரிவிக்கப்படுகிறது.

மேலும் இந்த கிரீடம் விலை மதிப்பற்றது என தெரிவிக்கப்படுகிறது.

ராணியின் கிரீடத்தில் உள்ளவை என்னென்ன?

* கிரீடம் சுமார் 3,000 கற்களால் பிரகாசிக்கிறது * கிரீடத்தில் 2,868 வைரங்கள், 273 முத்துக்கள் * 17 நீலக்கற்கள், 11 மரகதங்கள், 5 மாணிக்கங்கள் * அருகில் பார்த்தால் கண்கள் கூசும் * 85 ஆண்டுகளுக்கு முன் செய்யப்பட்டது * கிரீடத்தின் எடை சுமார் 1 கிலோ

Share.
Leave A Reply

Exit mobile version