இன்றைய காலகட்டத்தில் நம்மை சுற்றி நடக்கும் ஏராளமான விஷயங்கள், இணையத்தில் அதிகம் வைரல் ஆவதை நாம் பார்த்திருப்போம்.

இதில், வகை வகையான கண்டென்ட்டுகள் சமூக வலைத்தளங்களில் வலம் வந்து கொண்டே உள்ளன.

அதில் சில விஷயங்களை பார்க்கும் நேரத்தில் ஒரு தாக்கத்தை உருவாக்கும். அடுத்த சில நிமிடங்களில் கூட அவற்றை நாம் கடந்து செல்ல முடியும்.

ஆனால், அதே வேளையில் இன்னும் சில வீடியோக்கள் நாம் பார்த்து பல மணி நேரம் கடந்தால் கூட, அது நம்மிடையே ஏற்படுத்திய தாக்கம் என்பது சிறிதளவு கூட குறையாமல் அப்படியே இருக்கும்.

அப்படி வைரலாகும் விஷயங்கள், ஒட்டுமொத்த நெட்டிசன்களின் கவனத்தை பெறுவதுடன் மட்டுமில்லாமல், மிகவும் எமோஷனல் ஆகவும் பலரை உணர வைக்கும்.

இந்நிலையில், தற்போது அப்படி ஒரு வீடியோ தான், நெட்டிசன்கள் பலரையும் மனம் உருக வைத்துள்ளது.

பொதுவாக, பள்ளிப் பருவம் என்றாலே, மிகவும் சிறந்த நாட்களாக தான் பலருக்கும் இருக்கும்.

எந்தவித வேறுபாடும் இன்றி, ஒருவருக்கு ஒருவர் நட்பு பாராட்டியும், படிப்பு, விளையாட்டு உள்ளிட்ட பல விஷயங்களில் அட்டகாசம் செய்தும் பள்ளி நாட்களையே மிகுந்த பொன்னான தருணமாக பலரும் மாற்றுவார்கள்.

அந்த வகையில், பள்ளிக்கூடம் தொடர்பான ஒரு வீடியோ தான், நெட்டிசன்கள் பலரையும் கண் கலங்க வைத்துள்ளது.

இந்த வீடியோவில் மாற்றுத்திறனாளி சிறுவன் ஒருவர் வீல் சேரில் அமர்ந்திருக்க, ஏதோ போட்டி ஒன்று அங்கே நடைபெற்றுக் கொண்டிருந்ததாகவும் கூறப்படுகிறது.

மேலும், அந்த சிறுவன் அருகே அவரது நண்பர் ஒருவர் உட்கார்ந்து இருக்கிறார்.

அந்த மாற்றுத்திறனாளி சிறுவனுக்கு உணவு எடுத்து ஊட்டி விடுகிறார் சக மாணவன்.

ஏறக்குறைய ஒரு தாயின் ஸ்தானத்திலிருந்து தனது நண்பனுக்கு அந்த சிறுவன் செய்யும் செயல் தொடர்பான வீடியோ தற்போது பலரையும் நெகிழ வைத்துள்ளது.

 

கேரள மாநிலம், கோட்டக்கல் பகுதியை அடுத்த கோட்டூர் என்னும் பகுதியில் அமைந்துள்ள பள்ளி ஒன்றில் இந்த சம்பவம் நிகழ்ந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றது.

மேலும், அங்குள்ள ஆசிரியர் ஒருவர் இந்த வீடியோவை எடுத்து பகிர்ந்ததாகவும் கூறப்படுகிறது.

இந்த வீடியோவை காணும் நெட்டிசன்கள் பலரும், பள்ளிக் காலத்திற்கு பறந்து செல்லும் அதே வேளையில், தாய் இடத்தில் இருந்து அந்த சிறுவன் காட்டும் அபாரமான அன்பையும் கண்டு ஒரு நிமிடம் அப்படியே ஆனந்த கண்ணீரும் வடிக்க தான் செய்கின்றனர்.

Share.
Leave A Reply

Exit mobile version