மதுரை திருப்பரங்குன்றம் பகுதியை அடுத்து அமைந்துள்ள கிராமம் ஒன்றை சேர்ந்தவர் மருதன் (வயது 85). இவரது மனைவியின் பெயர் ஆண்டிச்சி (வயது 75). இந்த தம்பதியருக்கு மூன்று மகன்களும் ஒரு மகளும் உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றது.

மேலும், தங்களின் மகன்களுடன் மருதன் மற்றும் அவரது மனைவி ஆண்டிச்சி ஆகியோர் வசித்து வந்ததாகவும் தகவல்கள் கூறுகின்றது.

இந்த நிலையில், கடந்த சில மாதங்களாக மருதன் உடல்நிலை பாதிக்கப்பட்டு இருந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றது.

இதற்காக அவர் சிகிச்சையும் பெற்று வந்ததாக கூறப்படும் நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பாக உயிரிழந்துள்ளார் மருதன்.

இத்தனை ஆண்டுகள் தன்னுடன் வாழ்ந்த கணவரின் மறைவு, ஆண்டிச்சியை கடுமையாக பாதித்துள்ளது.

கணவரின் பிரிவால் அதிர்ச்சியில் அவரது உடல் அருகேயே இருந்து வந்துள்ளார் மனைவி ஆண்டிச்சி. வருத்தமும், வேதனையும் அவரை சூழ்ந்து கொள்ள, கணவர் உடல் அருகே இருந்து அழுது கொண்டே இருந்த ஆண்டிச்சி, திடீரென மயங்கி விழுந்தது, அங்கிருந்தவர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

உடனடியாக அவரை பரிசோதித்து பார்த்ததில், ஆண்டிச்சியும் உயிரிழந்தது தெரிய வந்துள்ளது.

ஏற்கனவே, மருதன் மறைவால் வேதனையில் இருந்த குடும்பத்தினர், ஆண்டிச்சியின் மறைவால் இன்னும் சோகத்தில் உறைந்து போயினர்.

இதனைத் தொடர்ந்து, ஆண்டிச்சி உடல், கணவர் மருதனின் உடல் அருகே அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்தது.

இதன் பின்னர், கணவன், மனைவி ஆகியோரின் உடல்கள், அலங்கரிக்கப்பட்ட ஒரே ஊர்தியில் வைத்து இறுதி ஊர்வலமும் நடத்தப்பட்டது.

கணவர் உயிரிழந்த துக்கத்தில் இருந்து மீளாமல் இருந்த மனைவியும் உயிரிழந்த சம்பவம், ஒட்டுமொத்த கிராமத்தையும் சோகத்தில் மூழ்கடித்துள்ளது.

Share.
Leave A Reply

Exit mobile version