Share Facebook Twitter LinkedIn Pinterest Email கோதுமை மாவின் விலை குறையும் பட்சத்தில் எதிர்காலத்தில் கொத்து விலையை குறைக்க தயார் என சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. அதன் தேசிய அமைப்பாளர் அசேல சம்பத் இன்று (06) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில், “இந்த நாட்டின் அப்பாவி மக்கள், தோட்டத் தொழிலாளிகள், ஒரு ரொட்டியை சாப்பிட்டு, இந்த நாட்டின் உற்பத்தி பொருளாதாரத்திற்கு பங்களிக்கின்றனர். இன்று அந்த மக்கள் சாப்பிடுவதற்கு வழியில்லை. மிகப்பெரிய மாஃபியா உள்ளது. நேற்று கதிர்காமத்தில் ஒரு கிலோ கோதுமை மா 490 ரூபாய். எனவே, மாவின் விலை 250 ரூபாய் வரை குறைந்தால், கொத்து விலை, மரக்கறி ரொட்டி விலை, ரோல்ஸின் விலையை குறைக்க தயாராக உள்ளோம். இது ஊடக நிகழ்ச்சி அல்ல. இந்நாட்டு மக்களுக்கு ஏதாவது நிவாரணம் கிடைக்குமா? அந்த நிவாரணம் சேவைகள் மூலம் வழங்கப்பட வேண்டும். அப்படித்தான் நடக்க வேண்டும். அதிகரிக்கும் போது அதிகரிக்கவும், குறையும் போது குறைக்காமல் இருக்கவும் முடியாது. அது நெறிமுறை அல்ல.” Post Views: 45