வவுனியா – ஹொரவபொத்தானை பிரதான வீதியில் அமைந்துள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் இன்று அதிகாலை மோட்டார் சைக்கிள் ஒன்று திடீரென தீப்பிடித்து எரிந்துள்ளது.
இதன்போது மோட்டார் சைக்கிளில் இந்தவர் பாய்ந்து தன்னை பாதுகாத்துக்கொண்டுள்ளார்.
எரிபொருள் நிரப்பு நிலையத்தில் கடமையிலிருந்த இளைஞர்கள் தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.
தீப்பற்றியமைக்கான காரணம் இதுவரை கண்டறியப்படாத நிலையில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.