திருமணம் குறித்துக் கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்துள்ளார் நடிகை த்ரிஷா.

முன்னணிக் கதாநாயகிகளுள் ஒருவராகத் திகழ்பவர் நடிகை த்ரிஷா. இவர் திரைப்படங்களில் நடிக்கத் தொடங்கும் முன் 1999ஆம் ஆண்டு சென்னை அழகிப் பட்டம் பெற்றவர்.

சாமி, கில்லி போன்ற பல வெற்றித் திரைப்படங்களில் நடித்துப் புகழ் பெற்ற திரிஷாவிற்கு, மணிரத்னம் இயக்கத்தில் வெளியான பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் குந்தவையாக நடித்தது மேலும் ஒரு அடையாளத்தை ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறது.

இந்நிலையில் பொன்னியின் செல்வன் பட நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட த்ரிஷாவிடம் ’ஏன் நீங்கள் இன்னும் திருமணம் செய்துகொள்ளவில்லை’ என்று கேள்வி கேட்கப்பட்டுள்ளது.

அதற்கு பதிலளித்த த்ரிஷா ’சாதாரணமாக என்னிடம், எப்போது திருமணம் செய்துகொள்ள வேண்டும் என நினைக்கிறீர்கள் என்று கேட்டால்கூட உங்களுக்கு பதில் கிடைக்கும்.

ஆனால், ஏன் திருமணம் செய்துகொள்ளவில்லை என்று என்னைக் கேட்டால் எனக்கு சுத்தமாகப் பிடிக்காது’ என்று கூறியிருக்கிறார்.

அவரின் நண்பர்கள் சிலர் திருமணத்திற்குப் பிறகு விவாகரத்து பெற நினைப்பதாகக் கூறிய த்ரிஷா,

’திருமணம் ஆன பிறகு விவாகரத்து பெற்றுக்கொள்வது எனக்கு வேண்டாம். விவாகரத்து மீது நம்பிக்கையும் இல்லை.

மகிழ்ச்சியற்ற திருமண வாழ்க்கையில் வாழ எனக்கு விருப்பமும் இல்லை. நான் வாழ்நாள் முழுவதும் சேர்ந்திருக்கக்கூடிய மனிதர் இவர்தான் என்று எனக்குத் தோன்ற வேண்டும்.

அப்படி ஒரு சரியான நபரைச் சந்தித்தால் நான் திருமணம் செய்துகொள்வேன்’ என்று த்ரிஷா தெரிவித்திருக்கிறார்.

 

Share.
Leave A Reply

Exit mobile version