`ஆறு ஆண்களை ஏமாற்றி திருமணம் செய்துவிட்டு, ஏழாவதாக ஒரு நபரைத் திருமணம் செய்ய முயன்ற மதுரையைச் சேர்ந்த ‘கல்யாண ராணி’ போலீஸாரிடம் வசமாகச் சிக்கினார். இந்நிலையில், அவரை போலீஸார் கஸ்டடியில் எடுத்து விசாரிக்கவிருக்கின்றனர்.

நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலூர் அருகிலுள்ள கள்ளிப்பாளையத்தைச் சேர்ந்தவர் தனபால். இவர், மதுரையைச் சேர்ந்த சந்தியா (26) என்ற பெண்ணை, கடந்த 7-ம் தேதி திருமணம் செய்தார்.

திருமணம் முடிந்ததும், இருவரும் ஒருநாள் வரை கணவன், மனைவியாக வாழ்ந்தனர். இந்நிலையில், திருமணம் முடிந்த 2-வது நாள் அதிகாலையில், தனபால் அசந்து தூங்கிய நேரம், கையில் கிடைத்தவற்றைச் சுருட்டிக்கொண்டு சந்தியா எஸ்கேப்பானார்.

விடிந்ததும் சந்தியாவைக் காணாமல் தேடிய தனபால், அதன் பிறகு சந்தியா நடத்திய திருமண மோசடியில் தான் ஏமாற்றப்பட்டதை அறிந்து அதிர்ச்சியடைந்தார்.

இதனால், தனபால் பரமத்தி வேலூர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அவர் கொடுத்த புகாரின் பேரில், பரமத்தி வேலூர் காவல் நிலைய போலீஸார், சந்தியா உள்ளிட்ட எட்டுப் பேர் மீது வழக்கு பதிவுசெய்தனர்.

பரமத்தி வேலூர்

இந்நிலையில், அதே பகுதியைச் சேர்ந்த தனபாலுக்குத் தெரிந்த ஒருவரை சந்தியா ஏழாவதாகத் திருமணம் செய்யவிருந்த நிலையில், திருசெங்கோடு வந்த சந்தியா உள்ளிட்ட நான்கு பேரைப் பிடித்த தனபால், பரமத்தி வேலூர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தார்.

நான்கு பேரையும் கைதுசெய்து சேலம் மற்றும் பரமத்தி சிறைகளில் போலீஸார் அடைத்தனர். இந்நிலையில், இந்த மோசடித் திருமணங்களை நடத்திய புரோக்கர் பாலமுருகனுக்குத் துணையாக இருந்த அய்யப்பன் என்பவர், தனபால் தரப்பு தாக்கியதால் காயமடைந்ததாக, பரமத்தி வேலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டிருந்தபோது தப்பி ஓடி, தலைமறைவானார்.

இதற்கிடையில், பாண்டமங்கலம் பகுதிதைச் சேர்ந்த வாத்து வியாபாரியான அய்யப்பன் என்பவர், ‘சந்தியாவுக்கும் எனக்கும் திருமணம் செய்ய நிச்சயமாகியிருக்கிறது’ என்று காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார்.

சந்தியா எட்டாவது திருமணத்துக்கும் முயன்றது இதன் மூலம் தெரியவந்தது. இந்நிலையில், தப்பியோடிய அய்யப்பன் பேசுவதாக ஒரு பரபர வீடியோ வெளியானது.

அந்த வீடியோவில், ‘இதேபோல் வேறு பெண்களை வைத்து சுமார் 12 மோசடித் திருமணங்கள் நடத்தப்பட்டுள்ளன.

மதுரையைச் சேர்ந்த பாலமுருகன் நெட்வொர்க் தலைவனாக இருந்துகொண்டு அவன் சொல்கிற வேலைகளை நாங்கள் செய்தோம். திருமணம் முடிந்ததும் இரண்டு நாளைக்கு மட்டுமே மாப்பிள்ளை வீட்டில் பெண் இருப்பார்.


கைதானவர்கள்

பிறகு கார் டிரைவர் ஜெயவேலை அனுப்பி மணப்பெண்ணைக் கொண்டுவந்துவிடுவார். புரோக்கர் பாலமுருகனுக்கும் இந்தத் திருமண மோசடிகளுக்கும் கார் டிரைவராக ஜெயவேல் இருந்திருக்கிறார்.

மாப்பிள்ளை வீட்டிலிருந்து ஓடிவரும் பெண்ணிடம் இருக்கும் பொருளை வாங்கி விற்று கார் டிரைவருக்குக் கொடுப்பார்.

இந்தத் திருமண மோசடித் தொழிலை கடந்த நான்கு வருடங்களாக தமிழகம் முழுவதும் செய்துவந்தார். நான் இனிமேல் அவர்களோடு சேர மாட்டேன்’ என்று பேசியிருந்ததாகச் சொல்லப்பட்டது.

இன்னொருபக்கம், போலீஸாரின் முதற்கட்ட விசாரணையில், ‘என்னை நிர்வாணப்படுத்தி போட்டோ, வீடியோ எடுத்து வைத்துக்கொண்டு பாலமுருகன் இப்படிப் பலரை ஏமாற்றி திருமணம் செய்யவைத்தார்.

30 வயது கடந்தும் திருமணமாகாமல் இருந்த ஆண்களைக் குறிவைத்துத்தான் இந்தத் திடத்தை அரங்கேற்றினோம். மாப்பிளை வீடுகளிலிருந்து திருமணம் முடிந்த இரண்டொரு நாள்களில் எஸ்கேப்பாகிவிடுவேன்.

நான் கொண்டுவரும் பணம், நகையில் எனக்குக் கொஞ்சம் கொடுத்துவிட்டு, மீதியை அவர்கள்

பறிமுதல் செய்யப்பட்ட கார்

என் குழந்தைகளைக் கொன்றுவிடுவதாக மிரட்டி, என்னை இப்படிப் பலரை ஏமாற்றி திருமணம் செய்ய வலியுறுத்தினர்’ என்று சந்தியா கண்ணீருடன் சொன்னதாக போலீஸ் வட்டாரத்தில் சொல்லப்பட்டது.

இந்நிலையில், பரமத்தி வேலூர் அரசு மருத்துவமனையிலிருந்து தப்பி ஓடிய அய்யப்பன் மற்றும் போலி பெண் புரோக்கர் நெட்வொர்க் தலைவன் பாலமுருகன்,

அவனுடைய கூட்டாளிகள் ரோஷினி, மாரிமுத்து ஆகியோரைப் பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டு, தீவிரமாகத் தேடிவருகின்றனர்.

மதுரையைச் சேர்ந்த பாலமுருகன், ரோஷினி, மாரியப்பன் ஆகிய மூன்று பேரையும் பிடிக்க மதுரைக்கு விரைந்த தனிப்படைக்கு, அவர்கள் மூன்று பேரும் வீட்டில் இல்லாமல் தலைமறைவாகியிருப்பது தெரியவந்திருக்கிறது.

அதேபோல், பரமத்தி வேலூரிலிருந்து தப்பி ஓடிய அய்யப்பனும், தலைமறைவாக இருக்கிறார். போலீஸாரின் விசாரணையில், நான்கு பேரும் தமிழ்நாட்டிலிருந்து வெளியேறி வேறு மாநிலத்துக்குச் சென்று தலைமறைவாக இருக்கலாம் எனத் தெரியவந்திருக்கிறது.

மணகோலத்தில் சந்தியா

Share.
Leave A Reply

Exit mobile version