இந்தியாவின் முதலாவது உள்நாட்டு தயாரிப்பு High-Altitude Combat Helicopter தாக்குதல் உலங்கு வானூர்தி 2022-10-03 திங்கட் கிழமை பறக்க விடப்பட்டுள்ளது.
இந்த உற்பத்தி இந்தியாவிற்கு தேவையான எல்லா பாதுகாப்பு படைக்கலன்களையும் உபகரணங்களையும் உள்நாட்டில் உற்பத்தி செய்யும் முயற்ச்சியின் ஒரு பெரிய படி என இந்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பெருமைப்பட்டுக் கொண்டார்.
உக்கிரம் என்னும் பொருள் பட இத் தாக்குதல் உலங்கு வானுர்திக்கு Prachand எனப் பெயரிடப்பட்டுள்ளது.
2010இல் இதற்கான முதல் வடிவம் உருவாக்கி தேர்வுக்கு உள்ளாக்கப்பட்டது. Prachand வானூர்திகள் இந்தியாவில் தேஜஸ் விமானங்களைப் போல் Light Combat Aircraft வகையை சார்ந்தது.
இதுவரை இந்தியப் படையினருக்கு தேவையான தாக்குதல் உலங்கு வானூர்திகளை போயிங் நிறுவனத்திடமிருந்து வாங்கப்பட்டது.
உலகின் மிக உயர எல்லையில் செயற்படும் திறன்
சீன எல்லையில் மிகவும் உயரமான இடத்தில் செயற்படக்கூடிய வகையில் Prachand என்னும் High-Altitude Combat Helicopter வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த
இந்திய உலங்கு வானூர்தியின் தன்மைகள்:
1. 5.8 தொன் எடை
2. இரட்டை இயந்திரம்
3. எதிரியின் ரடாரக\ளால் கண்டறியக் கடினமான புலப்படாத்தன்மை (Stealth Features)
4. இரவிலும் தாக்குதல் செய்யக் கூடியது
5. எதிரியின் தாக்குதலை தாக்குப் பிடிக்க கூடிய கவசப் பாதுகாப்பு (Armoured Protection)
6. தீவிரவாதிகளுக்கு எதிராக சிறப்பாகச் செயற்படக் கூடியது
இந்திய அரசு Prachand உலங்கு வானூர்தியின் உற்பத்தியை HAL என சுருக்கமாக அழைக்கப்படும் Hindustan Aeronautics Ltd இடம் ஒப்படைத்திருந்தது.
இந்தியப் பாதுகாப்புத் துறை முதலில் 15 Prachandஇற்கான உற்பத்தி வேண்டுதலைசெய்துள்ளது. அவற்றின் மொத்தப்பெறுமதி 39பில்லியன் ரூபாக்களாகும்.
அமெரிக்க போயிங் நிறுவனத்தின் Apache உலங்கு வானூர்திகள் 1890குதிரைவலுக் கொண்டவை.
இந்தியாவின் Prachandஇன் வலிமை 1430 மட்டுமே. Apache இன் உயர் வேகம் 295கிமி/மணி Prachandஇன் வேகம் 280. Prachand 6500கிமீ உயரத்தில் பறந்து 700கிமீ தொலைவில் உள்ள இலக்குகளை இனம் காணக் கூடியது.
ஆனால் Apache 6400கிமீ உயரம் மட்டும்வரை பறந்து 480கிமீ தொலைவில் உள்ள இலக்குகளை இனம் காணக் கூடியது.
Prachand என்னும் High-Altitude Combat Helicopter இன் இயந்திரங்கள் பிரான்சின் Safran SA நிறுவனத்தால் உருவாக்கப் பட்டவையாகும். அதனால் இந்தியாவின் Prachand ஒரு முழுமையான உள்ளூர் உற்பத்தி எனச் சொல்ல முடியாது.
2017-ம் ஆண்டில் இருந்து உலகிலேயே அதிக அளவு படைக்கலன்களை இறக்குமதி செய்யும் நாடாக இந்தியா இருக்கின்றது.
இந்தியாவிற்கு தேவையான படைக்கலன்களை இந்தியாவிலேயே உற்பத்தி செய்யும் நிலையை அடைய இந்தியா மிக நீண்ட தூரம் பயணிக்க வேண்டும்.