ஊபர் ஈட்ஸ் லீஃப்லி என்ற நிறுவனத்துடன் இணைந்து, கனடாவின் டொரன்டோ பகுதியிலுள்ள வீடுகளுக்கு கஞ்சாவை நேற்று முதல் விநியோகம் செய்துவருகிறது.

கனடாவில் பிரபல ஆன்லைன் உணவு டெலிவரி நிறுவனமான உபர் ஈட்ஸ் (Uber Eats), சட்டபூர்வமாக வீட்டுக்கே கஞ்சாவை டெலிவரி செய்வதாக தகவல் வெளியாகியிருக்கிறது.

கஞ்சா போதைப்பொருள்களை, உணவு ஆர்டர் செய்வதுபோல ஆர்டர் செய்பவருக்கு, நேற்று முதல் கனடாவின் டொரன்டோ பகுதியில் உள்ள வீடுகளுக்கு டெலிவரி செய்துவருகிறது.

இதற்காகவே பிரத்யேகமாக, கஞ்சா விற்பனை இணையதளமான லீஃப்லி-யுடன் இணைந்து இதை நடைமுறைப்படுத்தியிருக்கிறது.

மேலும், ஆன்லைன் மூலம் கஞ்சாவை ஆர்டர் செய்யும் நபர் 19 வயதைக் கடந்திருக்க வேண்டும். கஞ்சா டெலிவரி செய்யப்படும்போது அவரின் வயது சரிபார்க்கப்படும்.

மேலும், ஆர்டர் செய்யப்பட்ட கஞ்சாவை, நிறுவனத்தால் அங்கீகரிக்கப்பட்ட ஊழியர்தான் கொடுப்பார் என்பது உள்ளிட்ட சில நிபந்தனைகளையும் அந்த நிறுவனம் விதித்திருக்கிறது.

கஞ்சா

இந்த கஞ்சா டெலிவரி தொடர்பாக, உபர் ஈட்ஸ் (Uber Eats) நிறுவனத்தின் பொதுமேலாளர் லோலா காசிம்,“கஞ்சா விற்பனை இணையதளமான லீஃப்லி-யுடன் இணைந்து இதை நடைமுறைப்படுத்தியிருக்கிறோம்.

இது சட்டவிரோத போதைப்பொருள் சந்தையை முடக்கவும், போதையில் வாகனம் ஓட்டுவதை கணிசமாகக் குறைக்கவும் உதவும்” எனத் தெரிவித்திருக்கிறார்.

Share.
Leave A Reply

Exit mobile version