ஜெயலலிதா மரணம் குறித்து விசாரித்து வந்த நீதிபதி ஆறுமுகசாமி ஆணையத்தின் அறிக்கையில், ஜெயலலிதாவுக்கு ஆஞ்சியோ சிகிச்சை செய்யப்படாமல் இருக்க அப்போலோ மருத்துவர் தந்திரம் செய்தார் என்பன உள்ளிட்ட கடுமையான குற்றச்சாட்டுகள் கூறப்பட்டுள்ளன.
மேலும், டிசம்பர் 4ஆம் தேதி முதல் 5ஆம் தேதி வரை மருத்துவமனையின் என்ன நடந்தது என்பது பற்றிய முக்கிய தகவல்கள் இதோ:
ஜெயலலிதாவின் உதவியாளர் பூங்குன்றன், 4.12.2016 அன்று பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர் மறைந்த முதல்வரின் சிகிச்சை அறையில் சலசலப்பு நிலவியதாகக் கூறினார்.
செவிலியர் மகேஸ்வரி, தான் பிற்பகல் 2 மணியளவில் பணிக்கு வந்ததாகக் கூறினார். அவரிடம் ஜெயலலிதா தொலைக்காட்சியை அணைக்க சொன்னதாகவும், சிறிது நேரம் கழித்து அவருக்கு மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டதாகவும் தெரிவித்தார். (பக்கம் – 532, 46.63)
4.12.2016 அன்று, நளினி என்ற தொழில்நுட்ப ஊழியர், பிற்பகல் 3.50 மணிக்கு முன்பு ஜெயலலிதாவுக்கு ECHO ஸ்கேன் எடுத்தார்.
ஆனால், எந்த நேரத்தில் இதய செயலிழப்பு ஏற்பட்டது என்று தனக்கு தெரியவில்லை என அவர் சாட்சியம் அளித்தார். அவர் அறைக்குள் சென்ற நேரத்தை வைத்து பிற்பகல் 3.50 மணியளவில் என அவர் உறுதிப்படுத்தினார்.
இன்ஸ்ட்ரூமென்ட் கிளீனரான காமேஷ் என்பவரின் சாட்சியத்துடன் நளினியின் சாட்சியத்தை இணைத்து, அவர் மதிவாணன், பஞ்சாபகேசன் மற்றும் அருண், மூன்று இன்ஸ்ட்ரூமென்ட் கிளீனர்கள் மற்றும் டாக்டர் ரமேஷ் ஆகியோருடன் இணைந்து ஜெயலலிதாவுக்கு இதய மசாஜ் செய்தார்.
சிபிஆர் மாற்றாகச் செய்யப்படலாம், எனவே அவர்கள் பயிற்சி பெறாத நபர்களின் உதவியைப் பெற்றனர்.
பின்னர் ‘ஸ்டெர்னோடமி’ செய்யப்பட்டது. டாக்டர் டி. சுந்தர் மற்றும் டாக்டர் டி. என். ராமகிருஷ்ணனின் சான்றுகளின்படி, உடல் அசைக்கப்படாமல், 15 நிமிடங்களுக்கு ஸ்டெர்னோடமி செய்யப்பட்டது.
சி.பி. ஆர் செய்யும்போது ஸ்டெர்னோடமி செய்ய முடியாது என்று சொன்னார்கள். ஆனால், டாக்டர் மதன் குமார், சி.பி.ஆர் மற்றும் ஸ்டெர்னோடமியை ஒரே நேரத்தில் செய்யலாம் என்று கூறினார். (பக்கம் – 532, 533 – 46.64)
எக்கோ டெக்னீஷியனின் கூற்றுப்படி, 4.12.2016 அன்று, மாலை 3.50 மணிக்கே ‘மாரடைப்பு’ என்றால் என்னவென்று அவருக்குத் தெரியும்.
மேலும் (1) இதயம் செயல்படுகிறதா (2) Pericardial உள்ளதா மற்றும் வால்வுகளிலிருந்து கசிவு ஏதும் இல்லை போன்ற மூன்று பொருண்மைகளைக் கவனித்தார் அப்போது அங்கிருந்த Duty Doctor டாக்டர் ரமாதேவி இருப்பதாக விபிசி மானிட்டரில் அவரால் கவனிக்கப்பட்டதாகவும் இதயத்தின் VF மாறியது, இதயம் மட்டும் அதிர்ந்தது, ரத்த ஓட்டம் இல்லை என்று கூறினார். (பக்கம் 533 – 46.65)
மிகவும் குறிப்பிடத்தக்க வகையில், சி.பி.ஆர் உடன் ஒரே நேரத்தில் ஸ்டெர்னோடமி மேற்கொள்ளப்பட்டது மற்றும் அது சம்பந்தமாக, உடல்நிலை மோசமடைந்துக்கொண்டிருந்த மறைந்த முதல்வருக்கு சிகிச்சையளிக்க மூன்று அறுவை சிகிச்சை நிபுணர்கள் அழைக்கப்பட்டனர்.
ஸ்டெர்னோடமி செயல்முறையைத் தொடங்குவதற்கு முன்பு, டாக்டர் ராம தேவி கூறியது போல் மறைந்த முதல்வருக்கு ரத்தப்போக்கு அல்லது ரத்த ஓட்டம் எதுவும் இல்லை.
இதுவே அவர் அப்போது உயிருடன் இல்லை என்பதைக் குறிக்கிறது. (பக்கம் – 533 – 46. 66)
ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையின் டீன், டாக்டர் ஆர். ஜெயந்தி, நாள்தோறும் சுமார் 12000 பேர் தனது மருத்துவமனையில் சிகிச்சை பெற்றதாக தனது சாட்சியில் கூறினார்.
சிபிஆர் மற்றும் ஸ்டெர்னோடமி பற்றி அவரிடம் கேட்டபோது, உடலில் ரத்த ஓட்டம் இருந்தால் ஸ்டெர்னோடமியின் போது, தோல் வெட்டப்பட்டால், ரத்தம் வர வேண்டும் என்றும் சி.பி.ஆர் செய்தால் அதிக ரத்தம் வெளியேறும் என்றும் கூறினார் ( பக்கம் – 534 – 46. 67)
இந்த விவகாரத்தில் டாக்டர். மினல் எம் வோராவின் மற்றொரு சாட்சியமும் உள்ளது. 04. 12. 2016 அன்று நள்ளிரவு 1 மணிக்கும் 2 மணிக்கும் இடைப்பட்ட நேரத்தில், மறைந்த முதல்வரின் இதயத்தில் சில நிமிடங்களுக்கு ரிதம் கண்டதாகவும், மறைந்த முதல்வர் ECMO உடன் இணைக்கப்பட்ட பிறகு அவரின் கண் இமைகள் திறைந்து மூடியதாகவும்,
அவர் சுவாசித்ததாகவும் பின்னிட்டு 05. 12. 2016 அன்று காலை 9. 45 மணிக்கு அது பதிவு செய்யப்பட்டது எனவும் அவரின் முதன்மை விசாரணையில் தெரிவித்தார் (கோப்பு எண். 5, பக்கம் எண் 224).
அவரது குறுக்கு விசாரணையில் (பக்கம் எண். 10) , அதிகாலை 3.25 மணிக்கு 30 நிமிடங்களுக்கு தானாக ரிதம் இருந்ததாகக் கூறினார்.
(05.12. 2016 அன்று அதிகாலை 4.45 மணிக்கு கோப்பில் எழுதப்பட்டது). டாக்டர் ஏ.எல். அருள் செல்வன் மீண்டும் அழைக்கப்பட்ட போது, எய்ம்ஸ் மருத்துவக் குழுவின் முன்னிலையில், 4.12. 2016 இரவு மற்றும் 5. 12. 2016 அதிகாலையில் அவரது இடது pupillary response காணப்பட்டதாக அவரது சாட்சியத்தில் கூறினார்.
டாக்டர் கே.எஸ்.சிவக்குமார் தனது சாட்சியத்தில் 05. 12. 2016 அன்று அதிகாலை 3.25 மணிக்கு 30 நிமிடங்களுக்கு மறைந்த முதல்வரின் இதயம் செயல்பட்டதை குறித்து தனக்கு தெரிவிக்கப்படவில்லை என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும் அவர்கள் மறைந்த முதல்வரின் வாயில் ஸ்ட்ரா வைத்து, GAG -ஐ கண்டனர் அதுவும் அவருக்குத் தெரிவிக்கப்படவில்லை.
எம்பாமிங் செய்வதற்கு 10-15 மணி நேரத்திற்கு முன்பே மரணம் நிகழ்ந்திருக்க வேண்டும் என்று கூறிய டாக்டர் சுதா சேஷய்யனின் சாட்சியத்துடன் ஒப்பிடும் போது, மேற்கண்ட கூற்றை ஏற்க முடியாது. (பக்கம் – 534, 535 – 46. 68)
மருத்துவ பல்கலைக்கழகத்தின் துணைவேந்தரான டாக்டர் சுதா சேஷய்யன், இரவு 11.30 மணியளவில் எம்பாமிங் தொடங்கியபோது, மறைந்த முதல்வர் எம்பாமிங் செய்வதற்கு 10 முதல் 15 மணி நேரத்திற்கு முன்பே இறந்துவிட்டார் என கண்டறிந்தார்.
மேலும் மறைந்த முதல்வர் ECMO இல் இருந்தபோது மரணத்தை அறிவிக்க, அப்போலோ மருத்துவமனை 5.12 2016 அன்று AIIMS குழுவை வரவழைத்தது.
அப்போதுதான் முதல்முறையாக தொராசிக் அறுவை சிகிச்சை நிபுணரிடம் ஆலோசனை பெற வேண்டும் என்று அவர்கள் நினைத்தார்கள்.
எய்ம்ஸ் மருத்துவர்கள் 5. 12. 2-16 அன்று மாலை 5.00 மணியளில் வந்து, நோயாளியின் உடல் வெப்பநிலைக்கு (normothermia) கொண்டு வருமாறு மருத்துவமனை அதிகாரிகளிடம் கேட்டுக்கொண்டனர்.
மேலும் அவர்கள் இரண்டு முதல் மூன்று மணி நேரம் கழித்து பரிசோதித்து, இதய செயல்பாடு எதுவும் காணப்படவில்லை என்று கருத்துத் தெரிவித்தனர்.
எனவே மறைந்த முதல்வரை ECMO- இலிருந்து நீக்க அறிவுறுத்தினர். மாற்று அறுவை சிகிச்சை செய்யும் எண்ணமில்லாத போது ஏன் அவரை சாதாரண உடல் வெப்பநிலைக்கு அவர்கள் கொண்டுவந்தனர் (normothermia) என்பதை அவர்களால் விளக்க முடியவில்லை.
இதிலிருந்து நளினியின் சாட்சியத்தின்படி, மாலை 3. 50 மணிக்கு மறைந்த முதல்வரின் மரணம் உறுதி செய்யப்பட்டது என்பதும், சிபி ஆர், ஸ்டெர்னோடமி மற்றும் AIIMS மருத்துவர்கள் குழுவை அழைத்தது முற்றிலும் நேரத்தை போக்குவது மற்றும் வீணானது என்பதையும் மிகவும் தெளிவாகிறது
AIIMS மருத்துவரரான டாக்டர் வி. தேவ கெளரவ் பக்கம் எண். 2இல், சிபிஆர் செய்து 45 நிமிடங்களுக்குப் பிறகும், இதயம் செயல்படவில்லை என்றால், அவர்கள் அந்த நோயாளி இறந்ததாக அறிவிப்பார்கள் என்று கூறினார்.
அவருடைய இதயம் மீண்டும் செயல்படாது என்றும் அதை செயல்படுத்த முடியாது என்றும் நன்கு அறிந்த அவர்கள், ஏதோ ஒரு உள்நோக்கத்துடன் நேரத்தை நீட்டித்தனர். ( பக்கம் – 535, 536 – 46. 69)
மேற்கூறிய சான்றுகளிலிருந்து சுயநலம் கருதி மறைந்த முதல்வருக்கு மூளைச் சாவு ஏற்படாதது போல் தங்களைத் திருப்திப்படுத்துவதற்காக அப்போலோ மருத்துவமனை கேஸ் ஷீட்டில் ஒப்புதல் அளித்துள்ளது என்பது தெளிவாகிறது.
ஆனால், 28. 9.2016 முதல் அவர் இறக்கும் வரை, ஏதேனும் குறைபாடு உள்ளதா என்பதை தெளிவுபடுத்தக்கூடிய ஒரு சாதாரண ஆஞ்சியோகிறாம் செய்ய யாரும் ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என்பதை ஆணையம் புரிந்து கொள்ள முடியாமல் திணறுகிறது.
அதற்கான காரணமும் கோப்புகளில் குறிப்பிடப்படவில்லை. இது தொடர்பாக யாரிடமும் எந்த அறிக்கையும் இல்லை. ( பக்கம் – 536, 537 – 46.70).
மறைந்த முதல்வரின் இறந்த நேரம் முக்கியத்துவம் வாய்ந்ததும் நீண்டகால விளைவுகளை ஏற்படுத்துவதுமாகும்.
இறப்பு நேரம் அதிகாரப்பூர்வமாக 05. 12. 16, அன்று இரவு 11:30 மணி என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
மருத்துவமனையில் மறைந்த முதல்வரின் இறுதி நேரத்தில் அவரை கவனித்துக்கொண்ட பாராமெடிக்கல் பணியாளர்களின் சாட்சியங்களுக்கும் இதற்கும் பெருமளவில் வேறுபாடுள்ளது.
04.12.16 அன்று பிற்பகல் 3.50 மணிக்கு மறைந்த முதலமைச்சருக்கு இதய செயலிழப்பு ஏற்பட்டது என்றும், இதயத்தில் மின்சார செயல்பாடு எதுவும் இல்லை மற்றும் இரத்த ஓட்டம் இல்லை என்பதே அவரின் உடல்நிலையை கண்காணித்து வந்த செவிலியர்கள், தொழில்நுட்ப வல்லுநர்கள் மற்றும் பணி மருத்துவர்கள் தெளிவான சாட்சியங்களும் சாட்சியங்கள் ஆகும் ( பக்கம் – 537, 46.71).
எக்கோ கார்டியோகிராம் மற்றும் அதனுடன் தொடர்புடைய நோய் அறிதல் நடைமுறைகளால்கூட மறைந்த முதல்வர் பயன் பெற தகுதியற்றவராக அறிவிக்கப்பட்டார்.
அப்படி இருக்கும்போது மறைந்த முதல்வருக்கு தாமதமாக சிபிஆர் செய்யப்பட்டது சாட்சியங்களின் சாட்சியத்தின் படி மாலை 4:20 மணிக்கு சிபிஆர் தொடங்கப்பட்டதாக கூறப்பட்டது.
இந்த ஆணையத்தால் விசாரிக்கப்பட்டபோது மருத்துவமனையின் கருவி சுத்தம் செய்பவர்கள் மூன்று பேரால் சிபிஆர் செய்யப்பட்டது இயக்கத்தக்க வகையில் மறைந்த முதல்வரின் முதலில் மின் முறை மற்றும் ரத்த ஓட்டம் நிறுவப்பட்டல பிறகு அவரின் அந்த மாறமுடியாத நிலையில், அவரின் உடலில் சிபிஆர் செயல்முறை தொடங்கப்பட்டது ( பக்கம் – 537, 538 46.72).
செல்வி மகேஸ்வரி, செவிலியர், 04. 12. 2016 அன்று மதியம் பணிக்கு வந்ததாக அவரது சாட்சியத்தில் குறிப்பிட்டுள்ளார்.
மறைந்த முதல்வர் 04. 12. 2016 அன்று காலை உணவு எதையும் எடுத்துக் கொண்டதாகத் தெரியவில்லை. மேலும் அவர் பாலுடன் கார்ன்ஃப்ளேக்ஸை/ (cornflakes) எடுத்துக் கொண்டார். பகல் நேர முறைப்பணியில் இருந்தவர்கள் மறைந்த முதல்வர், மதியம் 1 மணியளவில் வாந்தி எடுத்ததாகக் கூறினர்.
அவர் பணிக்கு வந்தவுடன், உணவு உண்ண விரும்புகிறீர்களா எனக் கேட்க, அவர் காத்திருக்கும்படி சைகை செய்தார்.
பின்னர் தயாராக வைக்கப்பட்ட உணவை உண்ண மறுத்ததுடன், T.V பார்த்துக் கொண்டிருந்ததை அணைக்குமாறு கூறினார். சிறிது நேரத்திற்குப் பின்னர், அவர் சுவாசிப்பதற்கு சிரமமாக இருப்பதாக சைகை மூலம் அவரிடம் தெரிவித்தார் (பக்கம் 430, 431 – 40.9)
பிரேமா அந்தோணி, Incharge Nurse, 04.12. 2016 – அன்று அவர் இரண்டு முறை மறைந்த முதல்வரின் அறைக்குச் சென்றதாகக் கூறினார்.
அவரது கூற்றுப்படி, மறைந்த முதல்வர் காலை உணவை உட்கொண்டார். ஆனால், அவருக்கு அது தெரியாது. மேலும் மாலை 3.30 மணியளவில், அவர் கதவு வழியாக அவரைப் பார்த்தார். அவருக்கு உடல்நிலை சரியில்லை; CCU மருத்துவரும், தலைமை மருத்துவரும் அங்கேயே இருந்தனர். (பக்கம் 431 – 40.10)
பிரேமா அந்தோணி, பக்கம் எண் 2, கீழிருந்து 8 வது வரியில், கூறியதாவது:-
“04. 12. 2016- அன்று காலை வழக்கம் போல சிற்றுண்டி சாப்பிட்டார். அன்று மதியம் சாப்பிட்டார்களா என்று தெரியவில்லை அன்று பாக்கியம் 3: 30 மணி சுமாருக்கு அவருக்கு உடல்நிலை சரியில்லை என்றார்கள்.
CCU மருத்துவரும், chief டாக்டரும் அங்கிருந்தார். நானும் கதவுக்கு வெளியிலிருந்து பார்த்தேன். முதலில் இரண்டு மருத்துவர்கள் வந்தார்கள். நான் கண்ணாடி அறைக்கு வெளியில் நின்று கொண்டிருந்தேன்.
உள்ளே என்ன நடந்ததென்று எனக்குத் தெரியாது. முதல்வருக்கு கார்டியாக் அரெஸ்ட் ஏற்பட்டு விட்டதாக பின்னர் தெரிந்து கொண்டேன்.” (பக்கம் 431, 432 – 40.11)
முதலில், இரண்டு மருத்துவர்கள் உள்ளே வந்தனர்; அதன் பிறகு, பல மருத்துவர்கள் வந்தனர்; உள்ளே நடந்தது என்னவென்று அவருக்குத் தெரியவில்னல. மறைந்த முதல்வருக்கு மாரடைப்பு ஏற்பட்டது என்று அவர்கள் கூறினர்.
பின்னர் மாரடைப்பு ஏன் ஏற்பட்டது, என்ன நடந்தது என்பனத அவரால் விவரிக்க முடியவில்லை. இதய செயலிழப்பிற்குப் பின்னர், மனறந்த முதல்வருக்கு என்ன ஆனது என்று அவருக்குத் தெரியாது. மேலும் அவருக்கு மனறந்த முதல்வர் ECMO உடன் இணைக்கப்பட்டுள்ளார் என்பதும், எப்போது வெளியே எடுக்கப்பட்டார் என்பது பற்றியும் அவருக்குத் தெரியாது. (பக்கம் 432 – 40.12)
‘அழுகை சத்தம் கேட்டது’
பூங்குன்றன், 4.12.2016 அன்று, பிற்பகல் சுமார் 2.00 மணியளவில், மறைந்த முதல்வரின் அறைக்கு வெளியே நின்று கொண்டிருந்தப்போது, ஒரு மருத்துவர் உள்ளே சென்று வெளியே வந்தார்.
சிறிது நேரம் கழித்து, ஜெயலலிதாவின் அலறல் சத்தம் கேட்டது. அதன் பிறகு, பல மருத்துவர்கள் உள்ளே சென்று, அங்கு பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டது என்று தெரிவித்தார்.
வீர பெருமாள், கூடுதல் டிஜிபி, 4.12.2016 அன்று மாலை 4.30 மணியளவில், அழுகை சத்தம் கேட்டு, மறைந்த முதல்வரின் அறைக்குள் சென்றார். அப்போது, அழுது கொண்டிருந்த ஜெயலலிதாவை, செவிலியர்கள் வெளியே அழைத்து வருவதைப் பார்த்துள்ளார். (பக்கம் 432 – 40.13)
எம். நளினி, 4.12.2016 அன்று, பிற்பகல் சுமார் 3.50 மணியளவில் அவருடைய மாரடைப்பிற்குப் பிறகு, அவர் மறைந்த முதல்வருக்கு ECHO எடுத்தார் என்று கூறினார்.
அவர் ECHO எடுத்த போது, இதயம் செயல்படுவது நின்று விட்டதாகவும், மறைந்த முதல்வருக்கு மசாஜ் அளிக்கப்பட்டிருந்த ECHO தொடர்பான கோப்பு -கோப்பு எண்.23. தான் எடுத்த ECHO 04.12.2016 அன்றைய கோப்பில் இல்லை என்றும், அந்த ECHO-வை ஆராய்ந்தால், இதயத்தின் இறுதி அசைவுகள் தெரியும் என்றும் அவர் கூறினார்.
மறைந்த முதல்வருக்கு 04.12.2016-அன்று எடுக்கப்பட்ட ECHO வழக்கமானது அல்ல. ஆனால், மருத்துவர்களின் ஆலோசனைப்படி, அது அவசரகாலத்தில் எடுக்கப்பட்டது.
பொதுவாக, ECHO எடுத்தால், அந்த நேரம் கருவியிலும், அறிக்கையிலும் காட்டப்படும். அதை அவர்கள் குறிப்பிடுவார்கள்.
அவரால் குறிப்பிடப்பட்டிருந்த நேரம் மாலை 3.50 ஆகும். அந்த நேரத்தில் தான் அவர் அங்கு சென்றிருந்தார்.
எந்த நேரத்தில், மறைந்த முதல்வரின் இதயத்தின் செயல்பாடு நின்றது என்பது அவருக்குத் தெரியவில்லை. கடைசியாக அவரால் எடுக்கப்பட்ட ECHO பதிவு செய்யப்படவில்லை; ஏனெனில் அது மறைந்த முதல்வருக்கு சிகிச்சையளிப்பதற்காக எடுக்கப்பட்டதாகும்.
மேலும், அவர் வெளியே அனுப்பப்பட்டார். தான் ECHO எடுத்ததைப் பற்றி ECHO தற்காலிக படிவத்தில் பதிவு செய்தார். பொதுவாக, ECHO எடுக்கும் நேரத்தை மருத்துவமனையே குறிப்பிடும். அப்போது டாக்டர். P.C. ஜெயின்தான் இதயநோய் நிபுணராக இருந்தார் என்பதும் அவருக்கு நினனவில் இல்லை என்றும் கூறியுள்ளார். (பக்கம் 433, 434 – 40.14.