கொல்லம் அருகே பெண்ணை நிர்வாண பூஜைக்கு கட்டாயப்படுத்தியதாக மாமியார் கைது. மேலும் கணவர், மந்திரவாதி உள்ளிட்ட நான்கு பேரை போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர்.
கேரளா: கேரள மாநிலம், பத்தனம்திட்டாவில் சமீபத்தில் தர்மபுரியை சேர்ந்த பெண் உட்பட இரண்டு பெண்கள் நரபலி கொடுக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது,
இந்த சம்பவத்திற்கு பின்னர் கேரளாவில் போலி மந்திரவாதிகள் குறித்த பல தகவல்கள் வெளியாகி வருகின்றன. இந்த நிலையில் கொல்லம் பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர் தனது மாமியார், கணவர் தன்னை நிர்வாண பூஜைக்கு கட்டாயப்படுத்தியதாக புகார் கொடுத்துள்ளார்.
இதுகுறித்து வருமாறு, கேரள மாநிலம் கொல்லம் பகுதியைச் சேர்ந்தவர் ஷாலு சத்தியபாபு (வயது 36). இவருக்கு கடந்த 2016-ம் ஆண்டு திருமணம் நடந்துள்ளது. இந்நிலையில் கணவன் மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.
இதைத்தொடர்ந்து ஷாலு சத்திய பாபு தனது மனைவி குறித்து ஒரு மந்திரவாதியிடம் ஜோதிடம் பார்த்துள்ளார்.
அப்போது அந்த மந்திரவாதி ஷாலு சத்தியபாபு மனைவிக்கு, பேய் பிடித்துள்ளதாகவும் நிர்வாண பூஜை செய்தால் அந்த பேய் விலகும் என்றும் கூறியுள்ளார்.
இதைகேட்டு ஷாலு சத்தியபாபு தனது மனைவிக்கு கடந்த 2017 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் பூஜைக்கு ஏற்பாடு செய்துள்ளார்.
அப்போது ஆடைகளை எல்லாம் மாற்றிவிட்டு நிர்வாணமாக வந்து பூஜையில் உட்காருமாறு மந்திரவாதியும் கணவர் ஷாலுசத்திய பாபுவும், அவர் குடும்பத்தாரும் அந்த பெண்ணிடம் கூறியுள்ளனர்.
இதற்கு மறுப்பு தெரிவித்த அந்த பெண் தன் தாய் வீட்டுற்க்கு சென்று விட்டார். இதையடுத்து ஆற்றுங்கள் போலீசில் அப்போதுபுகார் செய்தார்.
அந்தபுகார் மீதுபோலீஸ் வழக்கு பதிவு செய்யவில்லை, எந்த விதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது.
அதன் பின் விவாகரத்து கேட்டு அந்தப் பெண், கணவர் மீது நீதிமன்றத்திலும் வழக்கு தொடர்ந்து உள்ளார்.
இந்நிலையில் கேரளத்தில் இரண்டு பெண்கள் மந்திரவாத பூஜையில் கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் வெளியாகி பரபரப்பான நிலையில் அந்தப் பெண் தனக்கு ஏற்பட்ட நிலை குறித்து சடையமங்கலம் போலீசில் புகார் செய்துள்ளார்.
கணவர், மாமியார் மற்றும் மந்திரவாதிகள் இருவர், தன்னை நிர்வாண பூஜைக்கு கட்டாயப்படுத்தியதாகவும், அதற்கு மறுத்ததால் வாழ்க்கையை இழந்து உள்ளதாகவும், அந்த புகார் மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த சடையமங்கலம் போலீஸ் ஷாலு சத்தியபாபு தாயார் லைசாவை (60) நேற்று கைது செய்தனர்.
இதர மூன்று பேர்கள் மந்திரவாதி அப்துல் ஜப்பார் (45), இவர் உதவியாளர் சித்திக் (36), கணவர் ஷாலு சத்தியபாபு (36), சாலு சத்தியபாபு சகோதரி சுருதி (29) ஆகிய நான்கு பேர் தலைமறைவாக உள்ளனர்.
சடையமங்கலம் போலீசார் இது குறித்து வழக்கு பதிவு செய்து மேல் விசாரணை செய்து வருகின்றனர்.