பசிபிக் சமுத்திரத்தின் மீது பறந்து செல்லும்போது கடந்த 2 மாதங்களாக பல பறக்கும் தட்டுகளை பார்த்தோம் என விமானிகள் பலர் தெரிவித்து உள்ளனர்.

நியூயார்க், உலக அளவில் வேற்று கிரகவாசிகள் மற்றும் பறக்கும் தட்டுகள் ஆகியவை பற்றிய விவாதமும், தேடலும் தொடர்ந்து கொண்டிருக்கிறது.

இந்த நிலையில், பறக்கும் தட்டுகள் பற்றிய ஆராய்ச்சியாளர் மற்றும் எப்.பி.ஐ.யின் முன்னாள் ஏஜெண்டான பென் ஹான்சன் புதிய தகவல் ஒன்றை வெளியிட்டு உள்ளார்.

இதுபற்றி நியூயார்க் போஸ்ட் செய்தி நிறுவனம் வெளியிட்டு உள்ள செய்தியில், இதன்படி, சவுத்வெஸ்ட் ஏர்லைன்ஸ், ஹவாயியன் ஏர்லைன்ஸ் மற்றும் பலர் இந்த பகுதியில் பல்வேறு பறக்கும் பொருட்களை பார்த்து உள்ளனர்.

முன்னாள் ராணுவ விமானி ஒருவர் தனது விமானத்திற்கு மேலே பல விமானங்கள் பறந்து சென்றதனை அவர் பார்த்து உள்ளார்.

லாஸ் ஏஞ்சல்ஸ் கடலோர பகுதியில் சார்ட்டர் ஜெட் விமானம் ஒன்றில் விமானி மார்க் ஹல்சி பறந்து செல்லும்போது, கடந்த ஆகஸ்டு 18-ந்தேதி விமான போக்குவரத்து கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொண்டுள்ளார்.

அவர்களிடம், எங்களை விட மிக அதிக உயரத்தில் சில விமானங்கள் எங்களுக்கு வடக்கே பறந்து செல்கின்றன. அவர்கள் யார் என தெரிகின்றதா? என கேட்டு உள்ளார்.

ஆனால், உறுதியாக எதுவும் தெரியவில்லை என பதில் வந்துள்ளது. Also Read – கனடாவில் கைத்துப்பாக்கி வாங்கவும், விற்கவும் தடை..! 23 நிமிடங்களுக்கு பின்பு, இதேபோன்ற 7 விமானங்களை பார்த்தேன் என ஹல்சி கூறியுள்ளார்.

முதலில் 3 என இருந்த நிலையில், இந்த எண்ணிக்கை அதிகரித்து உள்ளது. 5 ஆயிரம் முதல் 10 ஆயிரம் அடி வரை எங்களை விட உயரத்தில் பறந்தனர்.

அவர்கள் வட்டமடித்தபடியே செல்கின்றனர். அவர்களை நான் பலமுறை வழிமறித்து சென்று பார்த்தேன்.

ஆனால், இதுபோன்ற ஒன்றை இதற்கு முன்பு நான் பார்த்ததே இல்லை என அவர் கூறுகிறார். இந்த உரையாடல்கள் மற்றும் விமான போக்குவரத்து கட்டுப்பாட்டு அறையின் பேச்சு பதிவுகளை பென் ஹான்சன் தொகுத்து வாங்கியுள்ளார்.

தொடர்ந்து ஹேன்சன் கூறும்போது, வித்தியாசம் நிறைந்த ஒளி விளக்குகளை பார்த்தேன் என அந்த விமானி கூறியது போன்று, 15 வெவ்வேறு வர்த்தக விமானங்களில் பயணித்த விமானிகளும் தங்களுக்கு மேலே பறந்து சென்றவற்றை பற்றி கூறியுள்ளனர்.

அவர்களில் 6 பேர் தங்களது பெயர்களை தைரியமுடன் பதிவும் செய்துள்ளனர். விசாரணை அமைப்புகள் கேட்டு கொண்டால் விமானிகள் அதன்படி எல்லாவற்றையும் செய்ய வேண்டும் என அவர் கூறியுள்ளார்.

Share.
Leave A Reply

Exit mobile version