”நம்ம ஊர் பொறுக்கிங்க பொறுக்கிங்க தான். ரத்தத்துலயே ஊறுனது, வளர்ப்பும் அப்படி” பாடகி சின்மயி கோபம்
பிரபல பாடகி சின்மயி, நடிகர் ராகுல் ரவீந்திரனை 2014-ல் திருமணம் செய்து கொண்டார்.
அவருக்கு திருமணமாகி எட்டு வருடங்கள் கழித்து ஆண் மற்றும் பெண் என இரட்டை குழந்தை சமீபத்தில் பிறந்தது.
தனக்கு ட்ரிப்டா மற்றும் ஷ்ரவாஸ் என்ற இரட்டை குழந்தைகள் பிறந்ததை இன்ஸ்டகிராமில் அறிவித்திருந்தார் சின்மயி.
ஆனால் அவர் கர்ப்ப காலத்தில் எந்த படத்தையும் பதிவிடவில்லை என்பதால், சின்மயி வாடகை தாய் முறையில் குழந்தை பெற்றுக் கொண்டதாக விமர்சனங்கள் எழுந்தன.
அதற்கு பதிலடி தரும் விதமாக 32-வது வார கர்ப்ப காலத்தில் எடுத்துக் கொண்ட படத்தைப் பகிர்ந்தார் சின்மயி.
அதோடு இரட்டை குழந்தைகளுக்கு பாலூட்டும் படத்தையும் பதிவிட்டிருந்தார். அந்தப் படத்திற்கு கமெண்ட் செய்த நெட்டிசன் ஒருவர்,
வாழ்த்துகள் வைரமுத்து சார் எனக் குறிப்பிட்டிருந்தார். Also Read – படங்கள் தோல்வியால் வருந்தும் பூஜா ஹெக்டே இதைப் பார்த்து ஆத்திரமடைந்த சின்மயி, “இந்த புகைப்படத்தை நான் பதிவிட்டேன்.
எனக்கு ஏற்கனவே கருச்சிதைவு ஏற்பட்டதால் தான் புகைப்படத்தை வெளியிடவில்லை. என்னை துஷ்பிரயோகம் செய்தவர் என் குழந்தைகளின் தந்தை என்று கூறுகிறார்.
நம்ம ஊர் பொறுக்கிங்க பொறுக்கிங்க தான். ரத்தத்துலயே ஊறுனது, வளர்ப்பும் அப்படி” என்று பதிவிட்டுள்ளார்.
இவரின் இந்த பதிவு வீண் வன்மத்தை பெண்கள் மேல் திணிக்கும் நபர்களுக்கு சவுக்கு அடியாக இருக்கும் என்று பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.