வாடகை தாய் மூலமாக விக்னேஷ் சிவன் – நயன்தாரா நட்சத்திர ஜோடிக்கு இரட்டைக் குழந்தை பிறந்தது.
கையில் இரட்டைக் குழந்தைகளை வைத்துக் கொண்டு நயன்தாராவும், விக்னேஷ் சிவனும் பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். இந்த வீடியோ லைக்ஸை குவித்து வருகிறது.
நயன்தாரா மற்றும் இயக்குனர் விக்னேஷ் சிவன் ஆகியோருக்கு கடந்த ஜூன் 9-ம் தேதி சென்னைக்கு அருகே உள்ள ஒரு நட்சத்திர விடுதியில் திருமணம் நடைபெற்றது. இதற்கு பிறகு இருவரும் தங்களுடைய படங்களில் பிஸியாக இருந்தனர்.
வாடகை தாய் மூலமாக இந்த நட்சத்திர ஜோடிக்கு இரட்டை ஆண் குழந்தை பிறந்தது. கடந்த 9-ம் தேதி அந்த குழந்தைகளுடன் இருக்கும் புகைப்படங்களை பகிர்ந்த இயக்குனர் விக்னேஷ் சிவன் அதிகாரப்பூர்வமாக தன்னுடைய சமூக வலைதளப் பகுதிகளில் குழந்தைகள் பிறந்ததை அறிவித்தார்.