இந்துக்களின் தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு ஜனாதிபதி அலுவலகத்தில் இன்று திங்கட்கிழமை மாலை (24) சிறப்பு தீபாவளி நிகழ்வு, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் பிரதமர் தினேஷ் குணவர்தன ஆகியோர் தலைமையில் நடைபெற்றது.

ஜனாதிபதி செயலகம் ஏற்பாடு செய்திருந்த இந்த நிகழ்வில் இந்து மத சம்பிரதாயங்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட்டிருந்ததுடன் நிகழ்வு மிகவும் எளிமையாக நடைபெற்றது.

இந்த நிகழ்வில் அமைச்சர்களான டக்ளஸ் தேவானந்தா, மனுஷ நாணயக்கார, தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும், ஜனாதிபதி பணிக்குழாமின் பிரதானியுமான சாகல ரத்நாயக்க ஆகியோரும் கலந்துகொண்டனர்.

அத்துடன், ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன், முன்னாள் அமைச்சரும், ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகருமான அகில விராஜ் காரியவசம், ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர், முன்னாள் அமைச்சர் பாலித்த ரங்கே பண்டார, முன்னாள் அமைச்சர்களான தயா கமகே, அனோமா கமகே, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஆர்.யோகராஜா, கொழும்பு பிரதி மேயர் எம்.இக்பால், கொழும்பு மாநகர சபை உறுப்பினர்களான ஜெயராஜ் விஷ்ணுராஜ், கனகரஞ்சிதன் பிரணவன், துமிந்த ஆட்டிகல, மனோகரன் ஐக்கிய லக்வணிதா முன்னணி தலைவி சாந்தினி கோங்கஹகே, ஜனாதிபதியின் தொழிற்சங்கப் பணிப்பாளர் நாயகம் சமன் ரத்னப்பிரிய உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.

Share.
Leave A Reply

Exit mobile version